பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக ஆதார் பதிவு மையத்தில் குளறுபடி

Added : ஆக 05, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கான மையத்தில் கட்டண குளறுபடி செய்வதாக மக்கள்புகார் தெரிவித்தனர்.ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கவும்,ஆதார் அட்டையில் திருத்தம் செய்யவும் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் மையங்கள் செயல்படுகின்றன.ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக மையத்தில் 4 பெண்கள் ஒப்பந்த

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கான மையத்தில் கட்டண குளறுபடி செய்வதாக மக்கள்புகார் தெரிவித்தனர்.

ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கவும்,ஆதார் அட்டையில் திருத்தம் செய்யவும் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் மையங்கள் செயல்படுகின்றன.ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக மையத்தில் 4 பெண்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ளனர். இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். இங்கு புதிதாக ஆதார் பதிவு செய்வோர், ஐந்து வயதிற்குட்பட்டவர்களுக்கு இலவசமாக பதிவு செய்ய வேண்டும்.

மேலும் ஐந்து வயதிற்கு உட்பட்டவர்கள் பெரியவர்களாகும் போது கைரேகை பதிவு செய்து புதிதாக வழங்கவும் இலவசம்.அதே நேரம் திருத்தம்செய்ய, அலைபேசி எண் இணைக்க ரூ.50ம், கைரேகை தெளிவற்ற நிலையில் மீண்டும் கைரேகை பதிவு செய்ய ரூ.100 வசூலிக்க வேண்டும். ஆனால் இங்கு கூடுதலாக வசூலிப்பதாக தொடர்ந்து புகார் எழுகிறது.

கட்டணத்தை எழுதி வைக்காததும், கட்டணம் பெறுவதற்கான ரசீது வழங்காததும் இதற்கு காரணம்.எல்காட் கிளை மேலாளர்தட்சிணாமூர்த்தியிடம் கேட்ட போது, கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கட்டண விவரம் எழுதி வைக்கவும், ரசீது முறையாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X