பொது செய்தி

தமிழ்நாடு

'பிரம்ம கமலம்' மலர்ந்தது!

Added : ஆக 05, 2021
Share
Advertisement
திருப்பூர் : ஆண்டுக்கு ஒருமுறை, இரவில் மட்டுமே மலரும் பிரம்ம கமலம் எனப்படும் நிஷாகந்தி பூ, திருப்பூரில் மூன்று இடங்களில் மலர்ந்து மணம் வீசியது. சிவபெருமானுக்கு மிகுந்த விருப்பமான மலராக பிரம்ம கமலம் என்றழைக்கப்படும் நிஷாகந்தி பூ உள்ளது. அனந்த சயன பூ எனவும் இது குறிப்பிடப்படுகிறது. மிகுந்த மணம் நிறைந்த இந்த பூவானது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதன் செடியில் பூக்கும்

திருப்பூர் : ஆண்டுக்கு ஒருமுறை, இரவில் மட்டுமே மலரும் பிரம்ம கமலம் எனப்படும் நிஷாகந்தி பூ, திருப்பூரில் மூன்று இடங்களில் மலர்ந்து மணம் வீசியது.

சிவபெருமானுக்கு மிகுந்த விருப்பமான மலராக பிரம்ம கமலம் என்றழைக்கப்படும் நிஷாகந்தி பூ உள்ளது. அனந்த சயன பூ எனவும் இது குறிப்பிடப்படுகிறது. மிகுந்த மணம் நிறைந்த இந்த பூவானது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதன் செடியில் பூக்கும் தன்மை கொண்டது.இது இரவு நேரம் பூத்து அதிகாலையில் வாடிவிடும் குணம் கொண்ட தாகவும் உள்ளது. மலைப்பிரதேசத்தில் இந்த செடிகள் அதிகளவில் காணப்படும். சமநிலத்தில் வீடுகளில் ஒரு சிலர் இதை வளர்க்கின்றனர்.அவ்வகையில் இந்த பூ திருப்பூரில் நேற்று முன்தினம் சில வீடுகளில் செடி யில் மலர்ந்து மணம் வீசியது.

தென்னம்பாளையம், ராமே கவுண்டர் லே அவுட்டில் நடராாஜன் - பங்கஜவல்லி வீட்டில் உள்ள செடியில் 11 பூக்கள் மலர்ந்தது. அதே போல் அப்பகுதியில் உள்ள சில வீடுகளில் 2,5,7 என சில பூக்களும் மலர்ந்து.கண்ணகி நகர் 2வது வீதியில் வேலுசாமி என்பவர் வீட்டிலும், அம்மாபாளையம் அருகே தண்ணீர்பந்தலில், ஸ்ரீ கண்ணாத்தாள் நர்சரியிலும், இந்த பூக்கள் மலர்ந்து மணம் வீசியது.ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இந்த மலரை அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்து ரசித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X