பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளிமடையில் தரமற்ற மயான கட்டடம்... ரூ.10 லட்சம் செலவில் பணி நடப்பதாக 'பூச்சு'

Added : ஆக 05, 2021
Share
Advertisement
கோவை, : கள்ளிமடையில் மயானத்தின் மோசமான கட்டடம் இடிக்கப்படாமல், பழைய செங்கல் மீதே சிமென்ட் கலவை பூசி, ரூ.10 லட்சம் செலவில் பணி நடப்பதாக, 'பூச்சு' பூசப்படுகிறது. சிங்காநல்லுார் அருகே, 63வது வார்டு கள்ளிமடையில், 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் புதர்மண்டி கிடக்கும் மயானத்தை, ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில், இந்த மயானத்துக்கு
 கள்ளிமடையில் தரமற்ற மயான கட்டடம்... ரூ.10 லட்சம் செலவில் பணி நடப்பதாக 'பூச்சு'

கோவை, : கள்ளிமடையில் மயானத்தின் மோசமான கட்டடம் இடிக்கப்படாமல், பழைய செங்கல் மீதே சிமென்ட் கலவை பூசி, ரூ.10 லட்சம் செலவில் பணி நடப்பதாக, 'பூச்சு' பூசப்படுகிறது.

சிங்காநல்லுார் அருகே, 63வது வார்டு கள்ளிமடையில், 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் புதர்மண்டி கிடக்கும் மயானத்தை, ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில், இந்த மயானத்துக்கு சிங்காநல்லுார் தி.மு.க., எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து(2020-21), 10 லட்சம் ரூபாய் ஒதுக்கியமைக்கு நன்றி தெரிவித்து, கடந்தாண்டு அக்., மாதம் கள்ளிமடையில், 'பிளக்ஸ் போர்டு' வைக்கப்பட்டது; பணிகள் நடக்கவில்லை

.தற்போது, பணிகள் துவங்கியுள்ள நிலையில், பழைய கட்டடத்தின் சிமென்ட் பூச்சு மட்டும் இடிக்கப்பட்டு, பழைய செங்கல் மேலேயே பூச்சு பூசப்படுகிறது.சுமார் 20 அடி நீளம், 12 அடி அகலத்துடன் மயான சுவர் உள்ளது. மூன்று அடி உயர இந்த செங்கல் சுவரைக்கூட இடிக்காமல், பழைய செங்கல் மேல் சிமென்ட் கலவை பூசப்பட்டு வருகிறது.மேற்கூரைக்கு தகரங்கள் அமைக்க, நான்கு புறமும் இரும்பு பிரேம்கள் மட்டும் பொருத்தப்படுகின்றன. தரமற்ற இக்கட்டடத்துக்கு, 10 லட்சம் ரூபாய் செலவா என்பது, கள்ளிமடை மக்களின் குமுறல் கலந்த கேள்வி.

கள்ளிமடை மக்கள் கூறுகையில், 'புதர்மண்டி கிடக்கும் மயானத்தை பெயரளவில் முன்புறம் மட்டும் சுத்தம் செய்துள்ளனர். மூன்றடி உயர செங்கல் சுவரை கூட இடித்து அகற்றாமல், பூச்சு இடிக்கப்பட்டு, மோசமான பழைய செங்கல் மீதே, சிமென்ட் கலவை பூசப்படுகிறது. இதற்கு, 10 லட்சம் ரூபாய் செலவாம். தரமான கட்டடமே எங்களுக்கு தேவை' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X