பொது செய்தி

தமிழ்நாடு

ரகசியமாக தீர்மானம் கலெக்டரிடம் புகார்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
திருப்பூர் : காங்கயம் ஒன்றியம் மறவபாளையம் ஊராட்சி தலைவர் கீதாமணி, தன்னிச்சையாக செயல்படுவதாகவும், செயலாளர் உடந்தையாக இருப்பதாகவும், வார்டு உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த பிப்., 25 ம் தேதி நடந்த அவசர கூட்டத்தில், இரண்டு தீர்மானம் மட்டும் நிறைவேற்றி விட்டு, கீழ்பவானி வாய்க்காலை, கான்கிரீட் வாய்க்கால் அமைக்க ஆட்சேபனை தெரிவிப்பதாக மூன்றாவது தீர்மானம்,

திருப்பூர் : காங்கயம் ஒன்றியம் மறவபாளையம் ஊராட்சி தலைவர் கீதாமணி, தன்னிச்சையாக செயல்படுவதாகவும், செயலாளர் உடந்தையாக இருப்பதாகவும், வார்டு உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த பிப்., 25 ம் தேதி நடந்த அவசர கூட்டத்தில், இரண்டு தீர்மானம் மட்டும் நிறைவேற்றி விட்டு, கீழ்பவானி வாய்க்காலை, கான்கிரீட் வாய்க்கால் அமைக்க ஆட்சேபனை தெரிவிப்பதாக மூன்றாவது தீர்மானம், துணை தலைவர் மற்றும் எட்டு வார்டு உறுப்பினர்களுக்கும் தெரியாமல், நிறைவேற்றப்பட்டுள்ளதாக கலெக்டரிடம் கடந்த ஜூன் மாதம் புகார் அளிக்கப்பட்டது.கூட்டத்தில், ஏற்கனவே கலெக்டரிடம் அளித்துள்ள மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மான நகலுடன் வந்து, துணை தலைவர் நேற்று மீண்டும் கலெக்டரிடம் இதுகுறித்து கோரிக்கை வைத்துள்ளார்.

துணை தலைவர் மஞ்சு கூறுகையில், ''கட்டடங்களுக்கு அனுமதி வழங்கிய தீர்மானம், கூட்டத்துக்கு வருவதில்லை; பல்வேறு அத்துமீறல் நடந்துள்ளது; விசாரித்து, ஊராட்சி நிர்வாகத்தை முறைப்படுத்த வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X