சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கி கணக்கில் பணம் திருட்டு சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

Added : ஆக 05, 2021
Share
Advertisement
கோவை : கொரோனா நிதி தருவதாக கூறி, வங்கி கணக்கில் பணம் திருடும் கும்பலிடம், எச்சரிக்கையுடன் இருக்குமாறு, சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். மாநகர சைபர் கிரைம் போலீசார், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் பொபைல் போனுக்கு தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், தமிழக அரசு கொரோனா நிதி வழங்கியது போல, மத்திய அரசு 6,700 ரூபாய் வழங்க உள்ளதாக கூறி

கோவை : கொரோனா நிதி தருவதாக கூறி, வங்கி கணக்கில் பணம் திருடும் கும்பலிடம், எச்சரிக்கையுடன் இருக்குமாறு, சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாநகர சைபர் கிரைம் போலீசார், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் பொபைல் போனுக்கு தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், தமிழக அரசு கொரோனா நிதி வழங்கியது போல, மத்திய அரசு 6,700 ரூபாய் வழங்க உள்ளதாக கூறி வருகின்றனர்.வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழில் பேசுகின்றனர். அப்போது, பொதுமக்களிடம் வங்கி கணக்கு விவரத்தை கேட்கின்றனர். இதை பற்றி அறியாத சிலர், அவர்கள் கேட்கும் விவரத்தை தெரிவித்து விடுகின்றனர்.

இதை பயன்படுத்தி கொள்ளும் மர்ம நபர்கள், பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடி விடுகின்றனர். இது போன்ற மோசடி நபர்களிடம், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். யாராவது வங்கி கணக்கு விவரம் கேட்டால் தெரிவிக்க கூடாது.இவ்வாறு, சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X