கால்நடை மருத்துவமனை புகார் இருந்தால் கூறலாம்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை மருத்துவமனை புகார் இருந்தால் கூறலாம்!

Added : ஆக 05, 2021
Share
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், கால்நடை மருத்துவமனைக்கு செல்லும் போது சில நேரங்களில் டாக்டர்கள் இருப்பதில்லை, உரிய நேரத்தில் திறப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகை யில், புகார்களை தெரிவிக்க மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவமனை தொடர்பான

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், கால்நடை மருத்துவமனைக்கு செல்லும் போது சில நேரங்களில் டாக்டர்கள் இருப்பதில்லை, உரிய நேரத்தில் திறப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இப்பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகை யில், புகார்களை தெரிவிக்க மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவமனை தொடர்பான புகார்கள், டாக்டர்கள் குறித்த நேரத்துக்கு வராதது பற்றிய புகார்களை,துணை இயக்குனர் 94450 - 32577 மற்றும் இணை இயக்குனர் 94453 - 95142 ஆகிய எண்களுக்கு தெரிவிக்கலாம்.மேலும், இந்த எண்கள் அடங்கிய அறிவிப்பு பலகையை ஒவ்வொரு கால்நடை கிளை நிலையம், மருந்தகம், மருத்துவமனை, பெருமருத்துவமனை மற்றும் அலுவலக அறிவிப்பு பலகைகளில் அழிக்க இயலாவண்ணம், எல்லா நாட்களிலும் தெரியும்படி வைக்க வேண்டும் என்று, திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை அறிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X