பொது செய்தி

தமிழ்நாடு

நாடே இதயம்... எங்கள் நாடே உதிரம்! பாட்டு எழுதி பள்ளி மாணவி உருக்கம்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
கோவை : சுதந்திர தினத்தையொட்டி, தானே பாடல் வரிகள் எழுதி, இசையமைத்துள்ளார் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி தாட்ச்சாயணி.நாட்டின் 75வது சுதந்திர தினம் நெருங்கி வருகிறது. ஆண்டுகள் கடந்தாலும், அடிமைப்பட்டு கிடந்த நம் நாட்டை மீட்க, தனது இன்னுயிரை ஈந்தவர்களின் நினைவுகளை, அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய பொறுப்பு, நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.இதை, தனது வயது ஒத்த
 நாடே இதயம்... எங்கள் நாடே உதிரம்!  பாட்டு எழுதி பள்ளி மாணவி உருக்கம்

கோவை : சுதந்திர தினத்தையொட்டி, தானே பாடல் வரிகள் எழுதி, இசையமைத்துள்ளார் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி தாட்ச்சாயணி.நாட்டின் 75வது சுதந்திர தினம் நெருங்கி வருகிறது.

ஆண்டுகள் கடந்தாலும், அடிமைப்பட்டு கிடந்த நம் நாட்டை மீட்க, தனது இன்னுயிரை ஈந்தவர்களின் நினைவுகளை, அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய பொறுப்பு, நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.இதை, தனது வயது ஒத்த நண்பர்களுக்கும், எடுத்துரைக்கும் வகையில், புலியகுளம், கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி தாட்ச்சாயணி பாடல் எழுதி, கிடார் கருவி மூலம் இசையமைத்தும் உள்ளார்.'நாடே இதயம் எங்கள் நாடே உதிரம்...' என, தொடங்கும்.

இவரின் இப்பாடல் வரிகளில், 'கார்கில் வெற்றி முழக்கத்திலே இந்த வானும், மண்ணும் மகிழ்கிறதே…லடாக்கின் எல்லை முற்றத்திலே, எங்கள் எதிரியின் மூக்கு உடைகிறதே' என, ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு, செவ்வணக்கம் செய்யும் விதமாக பாடியிருப்பது, கேட்பவர்களின் மனதிலும், சுதந்திர பற்றை விதைத்து செல்கிறது.மாணவி தாட்ச்சாயணியிடம் பேசியபோது, '' நான் யு.கே.ஜி.,யில் இருந்தே, 'வோக்கல்' வகுப்பு, அண்ணாமலை பல்கலையில் படிக்கிறேன். திருப்பாவை, திருவெம்பாவை நன்றாக பாடுவேன்.

கீபோர்டு, கிடார் போன்ற இசைக்கருவிகளும் வாசிக்க பயிற்சி பெறுவதால், சொந்தமாக வரிகள் எழுதி இசையமைக்க வேண்டுமென நினைத்து, இப்பாடல் பாடியுள்ளேன். இதை பள்ளியில், சுதந்திர தினத்தன்று பாட திட்டமிட்டுள்ளேன். பள்ளி மூலம், இப்பாடலை, மத்திய கல்வி அமைச்சகத்திற்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X