கோழித்தீவனம் உற்பத்தி; மானிய கடன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோழித்தீவனம் உற்பத்தி; மானிய கடன்

Added : ஆக 05, 2021
Share
திருப்பூர் : மத்திய அரசின் ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக, அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும், பிரதமர் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், 2021 -25 வரை, ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்; மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு, 40 சதவீதமும் நிதி பங்களிப்புடன்

திருப்பூர் : மத்திய அரசின் ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக, அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும், பிரதமர் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம், 2021 -25 வரை, ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்; மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு, 40 சதவீதமும் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற அணுகுமுறையில் செயல்படுத்தப்படும்.கலெக்டர் தலைமையில் இயங்கும் குழு, இத்திட்டத்தில் வழிகாட்டுதல் வழங்கும். ஏற்கனவே இயங்கும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை மேம்படுத்துவது, உட்கட்டமைப்பை பெருக்குவது, புதிய நிறுவனம் துவங்குவது, வர்த்தக முத்திரை பதிவு, வியாபார கட்டமைப்பு போன்ற தேவைகளுக்கு நிதி உதவி அளிக்கப்படும்.

மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற வகையில், பொருட்களை தேர்வு செய்து உணவு பொருள் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நிறுவனங்கள், திட்ட மதிப்பீட்டில், 35 சதவீதம் அல்லது, 10 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி பெறும் வாய்ப்புள்ளது.விவரங்களுக்கு, 98656 78453 என்ற எண்களிலும், ddab.coimbatore2@gmail.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X