சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்... போலீஸ் செய்திகள்...

Added : ஆக 05, 2021
Share
Advertisement
வெள்ளி குத்துவிளக்கு திருட்டுதிருநகர்: நேதாஜி நகர் தனியார்குடியிருப்பில் வசிப்பவர் பூபதி ராஜா மனைவி ரேவதி. இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி வெளியூர் சென்றார். திரும்பி வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு 2 வெள்ளி குத்துவிளக்குகள், ரூ. 4000 உள்ளிட்டவைகளை மர்மநபர் திருடி சென்றது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.குண்டர் சட்டத்தில் கைதுமதுரை: ஒத்தக்கடை

வெள்ளி குத்துவிளக்கு திருட்டு

திருநகர்: நேதாஜி நகர் தனியார்குடியிருப்பில் வசிப்பவர் பூபதி ராஜா மனைவி ரேவதி. இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி வெளியூர் சென்றார். திரும்பி வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு 2 வெள்ளி குத்துவிளக்குகள், ரூ. 4000 உள்ளிட்டவைகளை மர்மநபர் திருடி சென்றது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

குண்டர் சட்டத்தில் கைது

மதுரை: ஒத்தக்கடை மலைச்சாமிபுரம் தமிழரசன் 23. இவர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதால் மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் பரிந்துரைபடி குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவிட்டார்.

கார் மோதி வாலிபர் பலி

மேலுார்: ஆத்துகரைபட்டி சுரேஷ் மகன் கவுதம் 22, டூவீலரில் மேலுாரிலிருந்து திருச்சி சென்றார்(ஹெல்மெட் அணியவில்லை). சத்தியபுரம் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது பின்னால் விருதுநகரிலிருந்து திருச்சி சென்ற கார் மோதியதில் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

லாரி டிரைவர் விபத்தில் பலி

கொட்டாம்பட்டி: நாகமங்கலம் மூர்த்தி 50, வீரசூடாமணிபட்டியில் தங்கி திருச்சுனை செந்திலின் லாரியில் டிரைவராக வேலை செய்தார். நேற்று முன்தினம்இரவு செந்தில் டூவீலரில் இவர் வீரசூடாமணிபட்டிக்கு சென்றார். (ஹெல்மெட் அணியவில்லை). வஞ்சிநகரம் நான்கு வழி சாலையில் சென்னையில்இருந்து -தூத்துக்குடி சென்ற கார் மோதியதில் மூர்த்தி பலியானார். எஸ்.ஐ., பழனியப்பன் விசாரிக்கிறார்.

பைக் விபத்தில் ஒருவர் பலி

ஆஸ்டின்பட்டி: பரம்புப்பட்டியைச் சேர்ந்த பிச்சை 60, கண்ணன் 65. இருவரும் சூரக்குளத்திலிருந்து பரம்புப்பட்டிக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) வந்தனர். ரிங்ரோட்டை கடக்க முயன்ற போது பெருங்குடியில் இருந்து திருமங்கலம் வந்த கார் மோதியதில் பிச்சை சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த கண்ணன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

ஊரணியில் மூழ்கி முதியவர் பலி

திருமங்கலம்: செங்கப்படை கணேசன் 59. இவரது மகன் சுவாமிமல்லம்பட்டியில் புதிதாக வீடு கட்டி வருவதால் அங்கே கணேசன் தங்கியிருந்தார்.நேற்று அங்குள்ள ஊரணியில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலியானார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

துாக்கிட்டு தற்கொலை

திருமங்கலம்: சோளம்பட்டி கோபிநாத் 45. போதைக்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X