செல்லரிக்கும் பொழுதுகளை சேமிக்கும் மாணவிகள்; இணைக்கும் கதை கேட்கலாம் வாங்க குழு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'செல்'லரிக்கும் பொழுதுகளை சேமிக்கும் மாணவிகள்; இணைக்கும் 'கதை கேட்கலாம் வாங்க' குழு

Added : ஆக 05, 2021
Share
மதுரை : இன்றைய இளம் தலைமுறையினருக்கு புத்தகம் வாசிப்பு என்பது ஒரு புரியாத மொழி. அவர்கள் பார்வையில் 'புத்தகம்' என்பது மியூசியத்தில் இருக்கும் பொருள். அவர்களுக்கு தெரிந்தது அலைபேசி, வாட்ஸ்ஆப், பேஸ்புக், யு-டியூப் என்ற 'டிஜிட்டல்' உலகம் தான்.போட்டோ, வீடியோக்களில் மட்டும் முகம் பார்த்து பேசி 'சாட்' செய்யும் 'டெக்னாலஜிகள்' நட்பு இன்று அதிகரித்து வருகிறது. நல்லது
 'செல்'லரிக்கும் பொழுதுகளை சேமிக்கும் மாணவிகள்;  இணைக்கும் 'கதை கேட்கலாம் வாங்க' குழு

மதுரை : இன்றைய இளம் தலைமுறையினருக்கு புத்தகம் வாசிப்பு என்பது ஒரு புரியாத மொழி. அவர்கள் பார்வையில் 'புத்தகம்' என்பது மியூசியத்தில் இருக்கும் பொருள். அவர்களுக்கு தெரிந்தது அலைபேசி, வாட்ஸ்ஆப், பேஸ்புக், யு-டியூப் என்ற 'டிஜிட்டல்' உலகம் தான்.போட்டோ, வீடியோக்களில் மட்டும் முகம் பார்த்து பேசி 'சாட்' செய்யும் 'டெக்னாலஜிகள்' நட்பு இன்று அதிகரித்து வருகிறது.

நல்லது எது கெட்டது எது என சுட்டிக்காட்டி முகம் பார்த்து உள்ளம்பேசும் நட்புக்கள் மறைந்து வருகிறது. புத்தக வாசிப்பு குறைந்து போனதும் இதற்கு ஒரு காரணம். இளைஞர்களின் புத்தக வாசிப்பை மீட்டெடுக்கும் முயற்சியாக மதுரை லேடி டோக் கல்லுாரி மாணவிகள் குழு களம் இறங்கியுள்ளது.

தமிழ் உயராய்வு மையம் மாணவிகள் 'கதை கேட்கலாம் வாங்க' குழுவை இரு ஆண்டுகளுக்கு முன் துவக்கி, வாசிப்பில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், எழுத்தாளர்களை இணைத்து வருகின்றனர்.

பிள்ளையார் சுழியிட்ட பேராசிரியர் கவிதா கூறியதாவது: நல்ல பொழுதுகளை 'செல்'லரித்துக் கொண்டிருக்கின்றன. இரவு பகல் தெரியாமல் சமூக வளைதளங்களில் இளைஞர் மூழ்கியுள்ளனர். புத்தக வாசிப்பு வழியாக அவர்களை யோசிக்க வைத்து சமூகத்தை நேசிக்க வைப்பதுஇக்குழுவின் நோக்கம். 15 நாட்களுக்கு ஒரு முறை இக்குழு கூடுகிறது. உறுப்பினர்கள் படித்த புத்தகங்கள் குறித்து முழு விவரங்களை பகிர்ந்து கொள்கின்றனர் என்றார்.


பல புத்தகங்கள் படித்த அனுபவம்


வெண்முகில், குழு ஒருங்கிணைப்பாளர்: தலைப்புகள் கொடுத்து பேசுவது, போட்டிகள் நடத்துவது என எழுத்து மீது ஆர்வம் உள்ளவர்களுக்குபல தளங்கள் உள்ளன. ஆனால் இந்த குழு ஒருவர் வாசித்த புத்தகம் குறித்து அந்த புத்தகம் சொல்லிய விஷயம், எழுத்து நடை, சமூக கருத்துக்களை பலருடன் பகிர்ந்துகொள்ள பயன்படுகிறது.

கொரோனாவிற்கு முன் மரத்தடியில் குழு கூட்டம் நடந்தது. தற்போது இணையவழியில் நடக்கிறது. இதுவரை 100க்கும் மேல் உறுப்பினர்கள் உள்ளனர். 50க்கும் மேற்பட்ட புத்தக பகிர்வுகள் நடந்துள்ளன. ஒரு பகிர்வில் பல புத்தகங்கள் படித்த உணர்வு ஏற்படுகிறது என்றார்.


சிந்தனையை துாண்டுகிறது


ஹாஜிரா, மாணவி உறுப்பினர்: பாடப் புத்தகங்களை தாண்டி இக்குழுவில் சேர்ந்து வாசிப்பு பயணத்தை துவக்கினேன்.தமிழ்த்துறை என்பதால் கூடுகையில் விவாதிக்க இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் தொடர்பான தேடல் ஏற்பட்டது. எழுத்தாளர்கள் சோ.தர்மனின் 'சூல்', பூமணியின் 'அஞ்ஞாடி', ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' மற்றும் சுந்தரராமசாமியின் 'ஜன்னல்', 'பல்லக்குதுாக்கிகள்', 'பிரசாதம்' போன்ற சிறுகதைகள் உட்பட 2021ல் இதுவரை 15 புத்தகங்கள் படித்து பகிர்ந்துள்ளேன் என்றார்.


நுாறு நண்பர்களுக்கு சமம்


அறிவுமதி, மாணவி உறுப்பினர்: இந்த கூடுகை மூலம் வாசிப்பு ஆர்வலர்களின் அறிமுகம் கிடைக்கிறது. ஒரு நல்ல புத்தகம் நுாறு நண்பர்களுக்கு சமம். இக்குழு உறுப்பினர்களுக்கு புத்தகம், நண்பர் என இரண்டும் கிடைக்கிறது. கடைசி கூடுகையில் நான் படித்த நா.முத்துக்குமாரின் 'வேடிக்கை பார்ப்பவன்' என்ற புத்தகம் வாசித்தஅனுபவங்களை பகிர்ந்தேன் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X