பொது செய்தி

தமிழ்நாடு

பசுமைக்கு தேவை விதைக்கும் சேவை

Added : ஆக 05, 2021
Share
Advertisement
மதுரையை மாசில்லாத நகரமாக மாற்றுவதுடன் பசுமைநகராக மாற்ற 'பசுமைக்கு தேவை விதைகள் விதைக்கும் சேவை' என்ற தாரக மந்திரத்துடன் 60 ஆண்டுகளாக விதைகளை துாவியும், விதைத்தும் வருகிறார் சொக்கலிங்க நகர் சித்தா டாக்டர் முனிசாமி. அவர் கூறியதாவது:சித்தா டாக்டராக பயணிக்க துவங்கும் முன்பே பசுமை மீது தீராத காதல் எனக்குள் இருந்தது. சந்திக்கும் மனிதர்களிடம் பசுமையின் மகத்துவம், மரம்
 பசுமைக்கு தேவை விதைக்கும் சேவை

மதுரையை மாசில்லாத நகரமாக மாற்றுவதுடன் பசுமைநகராக மாற்ற 'பசுமைக்கு தேவை விதைகள் விதைக்கும் சேவை' என்ற தாரக மந்திரத்துடன் 60 ஆண்டுகளாக விதைகளை துாவியும், விதைத்தும் வருகிறார் சொக்கலிங்க நகர் சித்தா டாக்டர் முனிசாமி.

அவர் கூறியதாவது:சித்தா டாக்டராக பயணிக்க துவங்கும் முன்பே பசுமை மீது தீராத காதல் எனக்குள் இருந்தது. சந்திக்கும் மனிதர்களிடம் பசுமையின் மகத்துவம், மரம் வளர்ப்பதின் அவசியங்கள் குறித்து ஒரு நிமிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.சித்தா சிகிச்சைக்காக காடு, மலை என மூலிகைகளை தேடி பயணிக்கும்போது அரிய வகை பழங்கள், பூக்கள், காய்கள் தரக்கூடிய விதைகளை சேகரிப்பேன்.

அத்துடன் வழக்கமான வேம்பு, புங்கன், பனை விதைகளை சேர்த்து நீர் நிலைகள்,சாலை ஓரங்களில் துாவி விடுகிறேன். 60 ஆண்டுகளாக ஆண்டுக்கு 100 கிலோ விதைகளை துாவி வருகிறேன். 91 வயதில் தனி ஒரு ஆளாக பசுமை சேவையில் ஈடுபடும் போதும் ஒரு இளைஞராகவே உணர்கிறேன். இத்துடன் பல்வேறு நோய்களுக்கு இயற்கை மருத்துவ குறிப்புகள் கூறுகிறேன். 1969ல் மல்யுத்த வீரனாக பல விருதுகளை வென்றுள்ளேன், என்றார்.

- இவரை வாழ்த்த 97897 89111

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X