சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மோசடி வழக்கில் மூவர் தலைமறைவு ; குற்றவாளியாக கோர்ட் அறிவிப்பு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
கோவை, : ஈமு நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் தலைமறைவான மூவரை, 'அறிவிக்கப்பட்ட குற்றவாளி' என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள சென்னிமலையில் ஈமு பண்ணை நிதி நிறுவனம் நடத்தி வந்த செல்வகுமார், 140 பேரிடம் 5.5 கோடி ரூபாய் டெபாசிட் பெற்று மோசடி செய்தார்.கடந்த 2012ல் கைது செய்யப்பட்ட அவர், கோவை டான்பிட் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.

கோவை, : ஈமு நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் தலைமறைவான மூவரை, 'அறிவிக்கப்பட்ட குற்றவாளி' என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள சென்னிமலையில் ஈமு பண்ணை நிதி நிறுவனம் நடத்தி வந்த செல்வகுமார், 140 பேரிடம் 5.5 கோடி ரூபாய் டெபாசிட் பெற்று மோசடி செய்தார்.கடந்த 2012ல் கைது செய்யப்பட்ட அவர், கோவை டான்பிட் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால், 2015 ஜூலையில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகும் கோர்ட்டில் ஆஜராக தவறியதால், அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக நீதிபதி ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேபோல், சென்னிமலையில் ஈமு பண்ணை நிதி நிறுவனம் நடத்தி, 107 பேரிடம் 1.39 கோடி ரூபாய் மோசடி செய்து சுரேஷ்பாண்டி என்பவர் தலைமறைவானார். பிடிவாரன்ட் பிறப்பித்தும் கோர்ட்டில் ஆஜராக தவறியதால், அவரையும் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக நீதிபதி உத்தரவிட்டார்.பெருந்துறை, மடத்துபாளையம் ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி, 14 பேரிடம் 33 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவான செந்தில்குமாரையும் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக நீதிபதி அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X