பொது செய்தி

தமிழ்நாடு

தென்மேற்கு பருவ மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
கூடலுார் : தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் அணைகளின் நீர்மட்டம் கடந்த ஆண்டைவிட அதிகமாக இருப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி ஆகிய 4 அணைகள் உள்ளன. பெரியாறு அணை கேரளாவில் இருந்த போதிலும் அதன் பாசனப்பரப்பு தேனி மாவட்டத்தில் உள்ளது. கடந்த ஆண்டு

கூடலுார் : தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் அணைகளின் நீர்மட்டம் கடந்த ஆண்டைவிட அதிகமாக இருப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி ஆகிய 4 அணைகள் உள்ளன. பெரியாறு அணை கேரளாவில் இருந்த போதிலும் அதன் பாசனப்பரப்பு தேனி மாவட்டத்தில் உள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கிய போதிலும் கூடுதலாக பெய்யாததால் நீர்மட்டம் மிகக்குறைவாக இருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் 1 ல் துவங்கிய தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டியதால் அணைகளின் நீர்மட்டம் கூடுதலாக உயர்ந்தது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர் இரு போக நெல்சாகுபடி நிலங்களுக்கும், 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உள்ள தோட்ட விவசாயத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கூடலுார் விவசாயி தெய்வேந்திரன் கூறுகையில் '' கடந்த 4 ஆண்டுகளாக மழை குறைவால் இருபோக நெல் சாகுபடியை முழுமையாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு மழை தீவிரத்தால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்ததாலும் ஜூன் 1 ல் பெரியாறு அணை திறக்கப்பட்டதாலும் இருபோக சாகுபடியை முழுமையாக செய்ய வாய்ப்புள்ளது,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X