பொது செய்தி

தமிழ்நாடு

போஸ்ட்மேன்கள் மூலம் ஆதாரில் அலைபேசி எண் இணைக்க வசதி

Added : ஆக 05, 2021
Share
Advertisement
தேனி : தேனிமாவட்டத்தில் போஸ்ட்மேன்கள் மூலம் ஆதாரில் அலைபேசி எண் இணைத்தல், திருத்த சேவையை பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அரசு, தனியார் நிறுவனங்களில் பல்வேறு பயன்பாட்டிற்கு ஆதாருடன் அலைபேசி எண்களை இணைப்பது அவசியமாகியுள்ளது. இதற்காக இ-சேவை மையம், தாலுகா, கலெக்டர் அலுவலகங்களில் உள்ள சேவை மையங்களுக்கு சென்று மக்கள் காத்திருக்கின்றனர். இச்சேவை

தேனி : தேனிமாவட்டத்தில் போஸ்ட்மேன்கள் மூலம் ஆதாரில் அலைபேசி எண் இணைத்தல், திருத்த சேவையை பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரசு, தனியார் நிறுவனங்களில் பல்வேறு பயன்பாட்டிற்கு ஆதாருடன் அலைபேசி எண்களை இணைப்பது அவசியமாகியுள்ளது. இதற்காக இ-சேவை மையம், தாலுகா, கலெக்டர் அலுவலகங்களில் உள்ள சேவை மையங்களுக்கு சென்று மக்கள் காத்திருக்கின்றனர். இச்சேவை எளிமைப்படுத்தும் வகையில் ஆதாரில் அலைபேசி எண் இணைப்பு, திருத்த பணிகளை 'இந்தியா போஸ்ட் பேமென்ட்' வங்கி மூலம் செயல்படுத்தும் புதிய வசதி அறிமுகம் செய்துள்ளது.

உங்கள் பகுதிக்கு வரும் போஸ்ட்மேன்களின் அலைபேசி மூலம் இப் பணி மேற்கொள்ளலாம். கட்டணம் ரூ.50. மூன்று நாட்களில் ஆதாருடன் அலைபேசி எண் இணைத்து 'அப்பேட்' செய்து கொள்ளலாம்.ஆதாரில் பெயர் திருத்தம், முகவரி மாற்ற சேவைகள் தலைமை, துணை தபால் நிலையங்களில் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04546-260 501 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X