பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கு சத்துணவு: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
சென்னை, : மதிய உணவு திட்டத்தின் வாயிலாக குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதை விரைந்து செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு சூடான சத்துணவு கிடைப்பதில்லை; எனவே, சத்துணவு வழங்க அரசு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில், 'சிட்டிசன் கன்ஸ்யூமர் சிவிக் ஆக் ஷன்

சென்னை, : மதிய உணவு திட்டத்தின் வாயிலாக குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதை விரைந்து செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு சூடான சத்துணவு கிடைப்பதில்லை; எனவே, சத்துணவு வழங்க அரசு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில், 'சிட்டிசன் கன்ஸ்யூமர் சிவிக் ஆக் ஷன் குரூப்' வழக்கு தொடர்ந்தது.இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கிராமப்புறங்களில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை திறப்பது குறித்து, அறிவியல்பூர்வ ஆலோசனைகளை பெறும்படி அரசுக்கு உத்தரவிட்டது. அங்கன்வாடி மையங்களை திறப்பது குறித்து, அரசு ஆலோசிக்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜரானார்.அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''இரண்டு முதல், ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு, மையங்களில் சமைத்து வீடுகளுக்கே உணவு வழங்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது. 15 நாட்களுக்குள் இதை செயல்படுத்துகிறோம்.''மற்ற குழந்தைகளுக்கு, செப்., 1 முதல், அங்கன்வாடி மையங்கள் வாயிலாக உணவு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது,'' என்றார்.

அதைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கு எவ்வளவு விரைவில் சத்துணவு கிடைக்க வகை செய்ய முடியுமோ, அவ்வளவு விரைவில் வழங்குவதை, அரசு உறுதி செய்யும்படி, முதல் பெஞ்ச் அறிவுறுத்தியது.விசாரணையை, செப்., 3க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X