டிஸ்கோ கத்தரி விலை அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டிஸ்கோ கத்தரி விலை அதிகரிப்பு

Added : ஆக 05, 2021
Share
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் டிஸ்கோ கத்தரி விலை அதிகரித்து கிலோ ரூ. 20 க்கு விற்பனையானது.ஒட்டன்சத்திரம் கிராமப் பகுதிகளில் கத்தரிக்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது. டிஸ்கோ கத்தரி ரகத்தை விவசாயிகள் விரும்பி பயிரிடுகின்றனர்.கடந்த மாதம் வரத்து அதிகமாக இருந்ததால் டிஸ்கோ கத்தரி கிலோ ரூ.14 க்கு விற்றது. தற்போது பல இடங்களில் அறுவடை முடிந்து விட்டதால்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் டிஸ்கோ கத்தரி விலை அதிகரித்து கிலோ ரூ. 20 க்கு விற்பனையானது.

ஒட்டன்சத்திரம் கிராமப் பகுதிகளில் கத்தரிக்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது. டிஸ்கோ கத்தரி ரகத்தை விவசாயிகள் விரும்பி பயிரிடுகின்றனர்.கடந்த மாதம் வரத்து அதிகமாக இருந்ததால் டிஸ்கோ கத்தரி கிலோ ரூ.14 க்கு விற்றது. தற்போது பல இடங்களில் அறுவடை முடிந்து விட்டதால் வரத்து குறைந்துள்ளது.இதனால் டிஸ்கோ கத்தரி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு கிலோ டிஸ்கோ கத்தரி ரூ.20 க்கு விற்றது. விலை உயர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X