பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் விழாவில் நள்ளிரவு பூஜை

Added : ஆக 05, 2021
Share
Advertisement
செம்பட்டி : எஸ்.புதுக்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஆண்டுதோறும் இங்குள்ள கருப்பணசாமி கோயிலில் ஆடி பதினெட்டாம் பெருக்கை தொடர்ந்து 2 நாட்கள் திருவிழா நடைபெறும்.முக்கிய நிகழ்வாக விளக்குகளை அணைத்து நள்ளிரவு பூஜை நடக்கும். இந்தாண்டு விழா நேற்று முன்தினம் பூஜாரி வீட்டிலிருந்து பண்டாரப்பெட்டி அழைப்புடன் துவங்கியது.பக்தர்கள்

செம்பட்டி : எஸ்.புதுக்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஆண்டுதோறும் இங்குள்ள கருப்பணசாமி கோயிலில் ஆடி பதினெட்டாம் பெருக்கை தொடர்ந்து 2 நாட்கள் திருவிழா நடைபெறும்.

முக்கிய நிகழ்வாக விளக்குகளை அணைத்து நள்ளிரவு பூஜை நடக்கும். இந்தாண்டு விழா நேற்று முன்தினம் பூஜாரி வீட்டிலிருந்து பண்டாரப்பெட்டி அழைப்புடன் துவங்கியது.பக்தர்கள் பொங்கல் வைத்தல், ஆடு பலியிடல் நேர்த்திக் கடன்களை செலுத்தினர். நள்ளிரவு ஒரு மணிக்கு கிராமத்தின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன.

குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் கோயிலில் கூடினர்.வாய்கட்டுடன் பங்கேற்ற பூஜாரிகள் சுவாமிக்கு நள்ளிரவு பூஜை நடத்தினர். அதிகாலை வரை சிறப்பு அபிஷேக, ஆராதனை தொடர்ந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 120 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக இவ்விழா நடப்பதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X