திண்டுக்கல் எஸ்.பி., முன் ஏராளமான சவால்!| Dinamalar

தமிழ்நாடு

திண்டுக்கல் எஸ்.பி., முன் ஏராளமான சவால்!

Added : ஆக 05, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல் எஸ்.பி., யாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீனிவாசன் முன் ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன.திண்டுக்கல் போலீஸ் எஸ்.பி.,ரவளிப்பிரியா தஞ்சாவூருக்கு மாற்றப்பட்டதால், திருவாரூர் எஸ்.பி., ஸ்ரீனிவாசன் திண்டுக்கல் எஸ்.பி.,யாக நேற்று பொறுப்பேற்றார்.மாவட்டத்தில் அவருக்கு சவாலான பணிகள் காத்திருக்கின்றன. சட்டவிரோதமாக மது, புகையிலை் விற்பனை, மணல் கடத்தல், குழந்தை

திண்டுக்கல் : திண்டுக்கல் எஸ்.பி., யாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீனிவாசன் முன் ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன.

திண்டுக்கல் போலீஸ் எஸ்.பி.,ரவளிப்பிரியா தஞ்சாவூருக்கு மாற்றப்பட்டதால், திருவாரூர் எஸ்.பி., ஸ்ரீனிவாசன் திண்டுக்கல் எஸ்.பி.,யாக நேற்று பொறுப்பேற்றார்.மாவட்டத்தில் அவருக்கு சவாலான பணிகள் காத்திருக்கின்றன. சட்டவிரோதமாக மது, புகையிலை் விற்பனை, மணல் கடத்தல், குழந்தை திருமணம், வன்முறை, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது.

இதுவரை பணியாற்றிய எஸ்.பி., ரவளிப்பிரியா தனிப்படைகளை அமைத்து, மணல் கடத்தல், குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோரை உடனுக்குடன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பரிந்துரைத்தார். இதனால் கடந்த ஓராண்டாக மணல் கடத்தல் முற்றிலும் தடுக்கப்பட்டது.புதிய எஸ்.பி., ஸ்ரீனிவாசன் அந்நடவடிக்கையை தொடர வேண்டும்.

ஏற்கனவே திண்டுக்கல் ஏ.டி.எஸ்.பி., ஆக பணிபுரிந்துள்ளதால், மாவட்டத்தைப் பற்றிய புரிதல் இவருக்கு உள்ளது.


கவனம் செலுத்த வேண்டியது


பழநி, நத்தம், திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் ஆறு, ஓடைகளில் மணல் கடத்தல் நடைபெறும். மாவட்டம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், குழந்தை திருமணங்கள் அதிகமாக நடக்கின்றன. சைபர் குற்றங்கள், போக்சோ வழக்குகள் அதிகரிக்கிறது. நத்தம் பகுதியில் கள்ளத்துப்பாக்கி, கொடைக்கானலில் நக்சல், போதைப் பொருள் விற்பனை, இவையெல்லாம் கண்காணிப்பில் இருக்க வேண்டியவை.

வெளி மாநிலங்களிலிருந்து தென்மாவட்டங்களுக்கு போதைப் பொருள் கடத்தும் மையமாக திண்டுக்கல் உள்ளது. மாவட்டத்தில் பெங்களூர், சென்னை, மதுரை, தேனி, கோவை, நத்தம் பகுதிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த ரோடுகளில் ரோந்து போலீசார் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.பொதுவாக பல வழக்குகளில் கண்துடைப்பு நடவடிக்கைகளே எடுக்கப்படுகின்றன. அவ்வாறின்றி குற்றச்செயல்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X