சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை சீரழித்த கரூர் இளைஞன் கைது

Added : ஆக 05, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு சிறுமியை திருமண ஆசை கூறி பலாத்காரம் செய்த கரூர் இளைஞர் குமரேசனை போலீசார் கைது செய்தனர். தாடிக்கொம்பு அருகே கள்ளிப்பட்டியில் ஒரு பாட்டி வீட்டில் பெற்றோரை இழந்த அவரது 17 வயது பேத்தி வசித்து வந்தார். அப்பகுதி தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார்.ஏப்.11ல் வீட்டிலிருந்த சிறுமி மாயமானார். போலீசார் விசாரித்தனர். ஜூலை 30ல்

திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு சிறுமியை திருமண ஆசை கூறி பலாத்காரம் செய்த கரூர் இளைஞர் குமரேசனை போலீசார் கைது செய்தனர்.

தாடிக்கொம்பு அருகே கள்ளிப்பட்டியில் ஒரு பாட்டி வீட்டில் பெற்றோரை இழந்த அவரது 17 வயது பேத்தி வசித்து வந்தார். அப்பகுதி தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார்.ஏப்.11ல் வீட்டிலிருந்த சிறுமி மாயமானார். போலீசார் விசாரித்தனர். ஜூலை 30ல் பேத்தியுடன் தாடிக்கொம்பு ஸ்டேஷனுக்கு வந்தார் பாட்டி. சிறுமிக்கு நிகழ்ந்த பாதிப்பு குறித்து தெரிவித்தார்.

போலீஸ் தரப்பில் கூறியதாவது: நூற்பாலையில் பணிபுரிந்த கரூரைச் சேர்ந்த குமரேசன் 23, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச் சென்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் ஒரு வீட்டில் தங்க வைத்தவர், பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

குமரேசன் ஏற்கனவே திருமணமானவர் எனத் தெரிந்ததால் தகராறு ஏற்பட்டது. ஜூன் 19ல் சேலம் ரயில் நிலையத்தில் சிறுமியை விட்டுவிட்டு, குமரேசன் மைசூருக்கு தப்பினான். பின்னர் தோழி ஒருவர் மூலம் கள்ளிப்பட்டி வீட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார், என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் குமரேசனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X