பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி தலைவர்களுடன் அதிகாரிகள் கலந்துரையாடல்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
வேடசந்துார் : வேடசந்துார் ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர்கள், எழுத்தர்களுடன்,பல்துறை அதிகாரிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.கூடுதல் பி.டி.ஓ., திருமலைசாமி தலைமை வகித்தார். கல்வார்பட்டி ஊராட்சி தலைவர் சுகுணாரமேஷ் பேசும்போது,'வனத்துறை சார்பில்விவசாய நிலங்களுக்கு மரக்கன்றுகள் வழங்குகின்றனர். அதேபோல் ஊராட்சிகளுக்கும்வழங்க வேண்டும்' என்றார்.வேளாண்துறை

வேடசந்துார் : வேடசந்துார் ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர்கள், எழுத்தர்களுடன்,பல்துறை அதிகாரிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

கூடுதல் பி.டி.ஓ., திருமலைசாமி தலைமை வகித்தார். கல்வார்பட்டி ஊராட்சி தலைவர் சுகுணாரமேஷ் பேசும்போது,'வனத்துறை சார்பில்விவசாய நிலங்களுக்கு மரக்கன்றுகள் வழங்குகின்றனர். அதேபோல் ஊராட்சிகளுக்கும்வழங்க வேண்டும்' என்றார்.வேளாண்துறை குறித்த பேச்சுஎழுந்தபோது, மாரம்பாடி ஊராட்சி தலைவர் ரொசாரியோ, 'வேளாண் திட்டங்களை பொது மக்களுக்குநேரடியாக தெரியப்படுத்தாமல், ஊராட்சிகளில் குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் தெரியப்படுத்தி மனுக்களை பெற்று திட்டத்தை முடிக்கின்றனர்.

இதனால்சாதாரண விவசாயிகள், பொது மக்களுக்கு திட்டத்தின் பயன் கிடைக்காமல் போய்விடுகிறது' என்றார்.அழகாபுரி அணையில் முறையாக தண்ணீரை தேக்கவும், மீன் வளர்ப்பில்கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை,கல்வார்பட்டி, பாலப்பட்டிஉள்பட 5 ஊராட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்கவும், கல்வார்பட்டி ஊராட்சி தலைவர் சுகுணா வலியுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X