பொது செய்தி

தமிழ்நாடு

மின் திருட்டு ரூ.16 லட்சம்; இழப்பீடு தொகை விதிப்பு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
மதுரை : தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழக மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி அமலாக்க அதிகாரிகள் நடத்திய ஆய்வில் திண்டுக்கல் வட்டத்தில் மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு, நுகர்வோருக்கு ரூ.16,60,795 இழப்பீட்டு தொகை விதிக்கப்பட்டது.தாழையூத்து, குமாரபாளையம், புஷ்பத்துார், சமயநந்தபுரம், பழநி ஆகிய மின் பகிர்மான

மதுரை : தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழக மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி அமலாக்க அதிகாரிகள் நடத்திய ஆய்வில் திண்டுக்கல் வட்டத்தில் மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு, நுகர்வோருக்கு ரூ.16,60,795 இழப்பீட்டு தொகை விதிக்கப்பட்டது.தாழையூத்து, குமாரபாளையம், புஷ்பத்துார், சமயநந்தபுரம், பழநி ஆகிய மின் பகிர்மான வட்டங்களில் 16 மின் திருட்டு நடந்தது கண்டறியப்பட்டது.

சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்ற நடவடிக்கை தவிர்க்க, குற்றத்தை ஒப்புக்கொண்டு ரூ.1,80,000 சமரச தொகை வழங்கியதால் போலீசில் புகார் அளிக்கவில்லை.இது போல் மின் திருட்டு சார்ந்த தகவல்களை 94430 37508 என்ற அலைபேசியில் தெரிவிக்கலாம் என மதுரை அமலாக்க செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X