கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சாலையை கடக்கும் வன விலங்குகளை விபத்திலிருந்து பாதுகாக்க வழக்கு; பதில் கோரும் உயர்நீதிமன்றம்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
மதுரை : வனவிலங்குகள் சாலையை கடக்கும்போது விபத்துக்களிலிருந்து பாதுகாக்க, தகுந்த மாற்று வழித்தடம் அமைக்க தாக்கலான வழக்கில் என்.எச்.ஏ.ஐ., பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரை அதலை புஷ்பவனம் தாக்கல் செய்த பொதுநல மனு: மணப்பாறை தச்சமலை முதல் பெரியமலை வனப்பகுதி இடையே மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. விலங்குகள் இடம்பெயர சாலையை

மதுரை : வனவிலங்குகள் சாலையை கடக்கும்போது விபத்துக்களிலிருந்து பாதுகாக்க, தகுந்த மாற்று வழித்தடம் அமைக்க தாக்கலான வழக்கில் என்.எச்.ஏ.ஐ., பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை அதலை புஷ்பவனம் தாக்கல் செய்த பொதுநல மனு: மணப்பாறை தச்சமலை முதல் பெரியமலை வனப்பகுதி இடையே மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. விலங்குகள் இடம்பெயர சாலையை கடக்கும்போது, வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளாகின்றன.ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற யானை மீது வாகனம் மோதியதில் காயமடைந்தது.

இந்திய வனப்பகுதியில் ரயில் பாதைகள் உள்ளன. அதை கடக்க முயன்றபோது ரயில்கள் மோதி 200 யானைகள் பலியாகியுள்ளன.தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் இதர சாலைகள், ரயில் பாதைகளில் வனவிலங்குள் கடந்து செல்ல தகுந்த மாற்று வழித்தடம் ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு புஷ்பவனம் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.துரைசுவாமி, எஸ்.ஆனந்தி அமர்வு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.,) தலைவர் செப்.,6 ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X