பொது செய்தி

தமிழ்நாடு

'மண்வளம் மீட்காவிட்டால் உணவு தட்டுப்பாடு ஏற்படும்'

Added : ஆக 05, 2021
Share
Advertisement
கோவை : ''மண்வளத்தை மேம்படுத்தாவிட்டால், அடுத்த 20 ஆண்டுக்குள், நம் நாட்டில் பெரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும்,'' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார். நதிகளை மீட்போம் இயக்கம் மற்றும் காவிரி கூக்குரல் இயக்கத்தின் நிர்வாக குழு கூட்டம், பெங்களூரில் நடந்தது. ஈஷா நிறுவனர் சத்குரு நிருபர்களிடம் கூறியதாவது:விவசாயம் நல்லபடியாக நடப்பதற்கும், நல்ல மகசூல்

கோவை : ''மண்வளத்தை மேம்படுத்தாவிட்டால், அடுத்த 20 ஆண்டுக்குள், நம் நாட்டில் பெரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும்,'' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார்.

நதிகளை மீட்போம் இயக்கம் மற்றும் காவிரி கூக்குரல் இயக்கத்தின் நிர்வாக குழு கூட்டம், பெங்களூரில் நடந்தது. ஈஷா நிறுவனர் சத்குரு நிருபர்களிடம் கூறியதாவது:விவசாயம் நல்லபடியாக நடப்பதற்கும், நல்ல மகசூல் எடுப்பதற்கும், மண்ணில் குறைந்தபட்சம், 4 முதல் 6 சதவீதம் கரிமவளம் இருக்க வேண்டும். நாட்டில் மொத்தம் உள்ள விவசாய நிலங்களில், 42 சதவீதம் மண்ணில் கரிம வள அளவு, அரை சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. அதை மீண்டும் வளமாக்க, 150 ஆண்டுகள் தேவைப்படும் என, வல்லுனர்கள் சொல்கிறார்கள்.

பல நூறு ஆண்டுகளாக, இயற்கை விவசாயம் செய்த நம் விவசாயிகள், கடந்த 40 ஆண்டுகளில் செயற்கை விவசாயத்திற்கு மாறினர். இது மண்ணின் வளத்தை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மண்வளத்தை மேம்படுத்தாவிட்டால், அடுத்த 20 ஆண்டுக்குள், நம் நாட்டில் பெரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும். மண் வளத்தை மீட்டெடுக்க விவசாயிகளின் ஒத்துழைப்பு அவசியம். காவிரி கூக்குரல் இயக்கத்தின் வாயிலாக விவசாயிகளை மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாற்றி வருகிறோம்.இவ்வாறு, சத்குரு தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X