வனத்தில் விடப்பட்ட யானை மீண்டும் ஊர் திரும்பியது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வனத்தில் விடப்பட்ட யானை மீண்டும் ஊர் திரும்பியது

Added : ஆக 05, 2021
Share
கூடலுார், : முதுமலையில், 85 நாட்கள் கராலில் வைக்கப்பட்டு வனத்தில் விடுவிக்கப்பட்ட, காட்டு யானை ஒரே இரவில், மீண்டும் தன் வாழ்விடமான மசினகுடி திரும்பியது. நீலகிரி மாவட்டம், மசினகுடியில் ஒரு காட்டு யானை தும்பிக்கையில் ஏற்பட்ட காயத்தால் சிரமப்பட்டு வந்தது. மே 5ல் வனத்துறையினர் யானையை பிடித்து, முதுமலையில் கராலில் அடைத்து சிகிச்சை அளித்தனர். யானை குணமான நிலையில், 85

கூடலுார், : முதுமலையில், 85 நாட்கள் கராலில் வைக்கப்பட்டு வனத்தில் விடுவிக்கப்பட்ட, காட்டு யானை ஒரே இரவில், மீண்டும் தன் வாழ்விடமான மசினகுடி திரும்பியது.

நீலகிரி மாவட்டம், மசினகுடியில் ஒரு காட்டு யானை தும்பிக்கையில் ஏற்பட்ட காயத்தால் சிரமப்பட்டு வந்தது. மே 5ல் வனத்துறையினர் யானையை பிடித்து, முதுமலையில் கராலில் அடைத்து சிகிச்சை அளித்தனர். யானை குணமான நிலையில், 85 நாட்களுக்கு பின், ரேடியோ காலர் பொருத்தி வனத்தில் விடப்பட்டது.ஆக., 2ம் தேதி லாரியில் ஏற்றிச் சென்று, 34 கி.மீ., தொலைவில் உள்ள சிக்கல்லா வனத்தில் யானையை விடுவித்தனர். அதன் நடமாட்டம் ரேடியோ காலர் வாயிலாக கண்காணிக்கப்பட்டது.

யானை நேற்று முன்தினம், வனப்பகுதி வழியாக, 34 கி.மீ., நடந்து, இரவு மீண்டும் மசினகுடி மாவனல்லா பகுதிக்கு வந்தது.முதுமலை துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ''20 பேர் கொண்ட வனக் குழுவினர், இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். யானை அருகே செல்வதையும், உணவு கொடுப்பதையும், மக்கள் தவிர்க்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X