கோயில் தற்காலிக பணியாளர்களை விடுவிப்பதற்கு எதிராக வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோயில் தற்காலிக பணியாளர்களை விடுவிப்பதற்கு எதிராக வழக்கு

Added : ஆக 05, 2021
Share
மதுரை : கோயில் தற்காலிக பணியாளர்களை விடுவிக்கும் உத்தரவிற்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் பொதுச் செயலாளர் முத்துச்சாமி தாக்கல் செய்த மனு:அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களை வரன்முறைப்படுத்துவதாக தமிழக அரசு 2020ல் அறிவித்தது. இதன்படி 3000 பேரை

மதுரை : கோயில் தற்காலிக பணியாளர்களை விடுவிக்கும் உத்தரவிற்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் பொதுச் செயலாளர் முத்துச்சாமி தாக்கல் செய்த மனு:அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களை வரன்முறைப்படுத்துவதாக தமிழக அரசு 2020ல் அறிவித்தது. இதன்படி 3000 பேரை வரன்முறைப்படுத்த அந்தந்த கோயில்களின் அறங்காவலர்கள்/ தக்கார் தீர்மானம் அடிப்படையில் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

அது நிலுவையில் உள்ளது.அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் தொகுப்பு பட்டியலில் இடம்பெறாத பணியிடங்களில் கமிஷனரின் அனுமதியின்றி அறங்காவலர் குழு தலைவர்/ அறங்காவலர்/தக்கார்/நிர்வாகிகள் தீர்மானம் அடிப்படையில் தற்காலிகமாக அல்லது தினக்கூலி/ தொகுப்பூதியம் அல்லது சம்பள விகித முறையில் நியமிக்கப்பட்டவர்களை பணியிலிருந்து விடுவிக்க அறநிலையத்துறை கமிஷனர் ஜூன் 22 ல் உத்தரவிட்டார்.

இதனால் குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.பல கோயில்களில் தினசரி பூஜைகள், சுகாதாரம், பராமரிப்பு பாதிக்கும். கோயில்களில் உள்ள மதிப்புமிக்க பொருட்கள், சிலைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். கமிஷனரின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி டி.கிருஷ்ணகுமார்:இதுபோல் நிலுவையிலுள்ள மற்றொரு வழக்குடன் சேர்த்து ஆக.,9 ல் பட்டியலிட வேண்டும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X