பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை காமராஜ் பல்கலையில் சி.சி., அமைக்க சிண்டிகேட் முடிவு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் உயர்கல்வி செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் கன்வீனர் கமிட்டி (சி.சி.,) அமைக்க சிண்டிகேட்டில் முடிவு எடுக்கப்பட்டது.இப்பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணனின் பதவிக்காலம் இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில், ஜூலை 22ல் திருவாரூர் மத்திய பல்கலை துணைவேந்தராக தேர்வு செய்யப்பட்டார்.எனவே புதிய துணைவேந்தர் தேர்வு செய்யப்படும் வரை பல்கலையை வழிநடத்த

மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் உயர்கல்வி செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் கன்வீனர் கமிட்டி (சி.சி.,) அமைக்க சிண்டிகேட்டில் முடிவு எடுக்கப்பட்டது.

இப்பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணனின் பதவிக்காலம் இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில், ஜூலை 22ல் திருவாரூர் மத்திய பல்கலை துணைவேந்தராக தேர்வு செய்யப்பட்டார்.எனவே புதிய துணைவேந்தர் தேர்வு செய்யப்படும் வரை பல்கலையை வழிநடத்த சி.சி., அமைக்க வலியுறுத்தப்பட்டது.இந்நிலையில் இணையவழியில் நடந்த சிண்டிகேட் கூட்டத்திற்கு கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

உயர்கல்வி செயலாளர் கார்த்திகேயன், கல்லுாரி கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன், சிண்டிகேட் உறுப்பினர்கள் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, தீனதயாளன், மேஷாக் பொன்ராஜ், பதிவாளர் வசந்தா பங்கேற்றனர்.இதில் செயலாளர் தலைமையில் கவர்னர் நியமன உறுப்பினர் பிரதிநிதி, பல்கலை பேராசிரியர் பிரதிநிதி கொண்ட கன்வீனர் குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும் தற்காலிக பணியாளர்களுக்கு சம்பள உயர்வு, பல்கலை கல்லுாரி தொகுப்பூதிய பேராசிரியர்களுக்கு யு.ஜி.சி., விதிப்படி ரூ.20 ஆயிரம் சம்பளம் வழங்குவது, நீதிமன்றம் உத்தரவு மற்றும் தமிழகஅரசு குழு அறிக்கை பெற்ற பின் 40 'சிக்கல்' பேராசிரியர்கள் பதவி உயர்வு குறித்து முடிவு எடுப்பது, 50க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்களுக்கு சீனியர் உதவி பேராசிரியர்பதவி உயர்வு வழங்குவதுஉள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

பதவிகளை இழக்கும் பேராசிரியர்கள்

சிண்டிகேட் கூட்டத்தில் 'ஒருவருக்கு ஒரு பதவி முறை' அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி ஒன்றுக்கும் மேற்பட்ட 'பொறுப்பு' உயர் பதவிகளில் உள்ள தேர்வாணையர் தர்மராஜ், டீன்கள் சந்திரசேகரன் (அறிவியல்), செல்லையா (கலை), தொலைநிலை கல்வி இயக்குனர் ராமசாமி மற்றும் இரண்டு புலங்களுக்கு ஒரே தலைவர் பதவி வகிக்கும் பேராசிரியர்கள் விரைவில் பதவி இழக்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X