கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வெளிநாடு விபத்து மரணத்திற்கு இழப்பீடு; உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
மதுரை : கத்தாரில் சாலை விபத்தில் இறந்தவருக்குரிய இழப்பீடு தொகையை அந்நாட்டு நீதிமன்றத்திலிருந்து விடுவித்து, மனைவிக்கு வழங்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ராமநாதபுரம் மாணிக்கசெல்வி தாக்கல் செய்த மனு:எனது கணவர் கிருஷ்ணமூர்த்தி கத்தார் தோஹாவில் வேலை செய்தார். அங்கு 2011 ல் சாலை விபத்தில் மரணமடைந்தார். இழப்பீடு வழங்க கத்தார் நீதிமன்றம்

மதுரை : கத்தாரில் சாலை விபத்தில் இறந்தவருக்குரிய இழப்பீடு தொகையை அந்நாட்டு நீதிமன்றத்திலிருந்து விடுவித்து, மனைவிக்கு வழங்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாணிக்கசெல்வி தாக்கல் செய்த மனு:எனது கணவர் கிருஷ்ணமூர்த்தி கத்தார் தோஹாவில் வேலை செய்தார். அங்கு 2011 ல் சாலை விபத்தில் மரணமடைந்தார். இழப்பீடு வழங்க கத்தார் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்தொகையை விடுவித்து, எனக்கு வழங்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை செயலாளர், கத்தாரில் உள்ள இந்திய துாதரகம், ராமநாதபுரம் கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மாணிக்கசெல்வி மனு செய்தார்.

நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.மத்திய அரசுத் தரப்பில், 'நீண்ட சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இழப்பீடு தொகை 77 ஆயிரம் கத்தார் ரியால் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அத்தொகையை விடுவிக்க சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் வெளியுறவுத்துறை சார்பில் மனு செய்யப்படும். தொகை விடுவிக்கப்பட்டதும் உடனடியாக மனுதாரருக்கு வழங்கப்படும்,' என தெரிவித்தது.

நீதிபதி:வெளியுறவுத்துறை செயலாளர் மிக உன்னிப்பாக கவனித்து, இழப்பீடு தொகையை விரைவில் விடுவிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் 4 மாதங்களில் மனுதாரரிடம் தொகையை ஒப்படைக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X