கோர்ட் செய்தி

தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் மலையில் தர்கா கொடி மரம் அகற்றும் உத்தரவிற்கு எதிராக வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Added : ஆக 05, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மலை உச்சியில் தர்கா அருகே அமைத்த இரும்பு கொடிமரத்தை அகற்ற ஆர்.டி.ஓ.,பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மலை உச்சியில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா உள்ளது. அருகே ஆலமரம் உள்ளது. அதில் முஸ்லிம்

மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மலை உச்சியில் தர்கா அருகே அமைத்த இரும்பு கொடிமரத்தை அகற்ற ஆர்.டி.ஓ.,பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மலை உச்சியில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா உள்ளது. அருகே ஆலமரம் உள்ளது. அதில் முஸ்லிம் சமூகத்தினரால் நடத்தப்பட்ட சந்தனக்கூடு திருவிழாவிற்காக கொடி மரம் கட்டப்பட்டது. திருவிழா முடிந்த பின்னும் அவற்றை அகற்றாததால், அகற்றுமாறு அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதில் மேல்நடவடிக்கை மேற்கொள்ள, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தவிர்க்க திருமங்கலம் ஆர்.டி.ஓ.,தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது.

அதனடிப்படையில் ஜூன் 25 ல் ஆர்.டி.ஓ.,பிறப்பித்த உத்தரவு: 2011 ல் நடந்த சமாதான பேச்சுவார்த்தை முடிவு அடிப்படையில் மரத்தால் அமைக்கப்பட்ட கொடி மரத்தை பயன்படுத்த வேண்டும்.தற்போது புதிதாக அமைத்த இரும்பு கொடி மரத்தை அகற்ற வேண்டும். 2011 ல் கொடிமரம் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையில் மாற்றங்கள் இல்லாத நிலையை கடைப்பிடிக்க வேண்டும். நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து இருதரப்பிலும் உரிய சிவில் நீதிமன்றத்தை நாடி பரிகாரம் தேடலாம் என குறிப்பிட்டார்.

இதை எதிர்த்து திருப்பரங்குன்றம் ஹசரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா ,பள்ளிவாசல் மூத்த மேலாண்மை அறங்காவலர் ஓசர்கான் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:ஆர்.டி.ஓ.,உத்தரவு எங்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமையை பாதிக்கிறது. இரு மதங்களுக்கு இடையே சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக தவறான உள்நோக்கில் அரசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தை முடிவு செய்ய ஆர்.டி.ஓ.,விற்கு அதிகாரம் இல்லை. எங்கள் தரப்பில் விளக்கமளிக்க வாய்ப்பளிக்கவில்லை. ஆர்.டி.ஓ., உத்தரவு ஒருதலைப்பட்சமானது. அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார்.சுப்பிரமணியசுவாமி கோயில் தரப்பில், 'தர்கா, பள்ளிவாசல் அவற்றிற்கு இடையே கொடிமரம் அமைந்துள்ள இடங்கள் முஸ்லிம்களுக்கு சொந்தம். மலை, மற்ற இடங்கள் கோயிலுக்குச் சொந்தம்,' என தெரிவித்தது.

நீதிபதி: சம்பந்தப்பட்ட இடத்தை சர்வே செய்ய அரசுத் தரப்பு கூறுகிறது. அதற்கு மனுதாரர் தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. இடத்திற்கு இதுவரை துல்லியமாக எல்லை நிர்ணயிக்கப்படவில்லை. இவ்விவகாரத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசுத் தரப்பு கூறுகிறது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X