மேகதாது அணை விவகாரம்; பா.ஜ., இன்று உண்ணாவிரதம்

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (31) | |
Advertisement
சென்னை : மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை, கர்நாடக அரசு கைவிட வலியுறுத்தி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில், தஞ்சையில் இன்று(ஆக.,5) உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.தமிழகத்துக்கு எதிரான மேகதாது அணை கட்டும் திட்டத்தை, கர்நாடக அரசு கைவிட வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் தஞ்சை மாவட்டம் பனகல் பில்டிங் அருகில் இன்று காலை 9:00 முதல், மாலை 5:00 மணி வரை உண்ணாவிரத போராட்டம்
BJP, Annamalai, Bharatiya Janata Party

சென்னை : மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை, கர்நாடக அரசு கைவிட வலியுறுத்தி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில், தஞ்சையில் இன்று(ஆக.,5) உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

தமிழகத்துக்கு எதிரான மேகதாது அணை கட்டும் திட்டத்தை, கர்நாடக அரசு கைவிட வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் தஞ்சை மாவட்டம் பனகல் பில்டிங் அருகில் இன்று காலை 9:00 முதல், மாலை 5:00 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகிக்கிறார். உண்ணாவிரதத்தில் பா.ஜ., மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


latest tamil newsமேலும், அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், டெல்டா விவசாயிகள் என, 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.ஜான் பாண்டியன் ஆதரவுஉண்ணாவிரத போராட்டத்திற்கு, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர், தமிழக பா.ஜ., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமியிடம் நேற்று வழங்கினார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
05-ஆக-202117:18:18 IST Report Abuse
தஞ்சை மன்னர் Please don't repeat the same comment
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
05-ஆக-202117:18:10 IST Report Abuse
தஞ்சை மன்னர் Please don't repeat the same comment
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
05-ஆக-202113:55:18 IST Report Abuse
vpurushothaman அணை நிரம்பி வழிந்தால்தான் காவிரியில் வெள்ளம் வருகிறது. இதுதான் பல ஆண்டு வாடிக்கை. எடி வந்தாலும் இடையில் பொம்மை வந்தாலும் இதுதான் நிலை. பிரதமராக இருந்த தேவே கவுடாவே தமது நிலையையும் கருதாது கர்னாடகத்துக்கே ஆதரவளித்தார். கர்னாடகத்திலிருந்து பிழைக்கத் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் ஆள நினைத்து ஆழம் பார்த்த பின் ஓதுங்கிக் கொண்டார்கள். நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்ற குரல் மங்கிப் போய் ஆண்டுகள் பலவாயின. ' மாமழை போற்றுதும் ...மாமழை போற்றுதும் " எனப் பிரார்த்திப்போம். தமது கடமையைச் செய்ததாக தமிழக பா ஜ க வினர் எண்ணுகின்றனர். அரசியலில் இதுவெல்லாம் சகஜம்தானே ?
Rate this:
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஆக-202117:22:55 IST Report Abuse
Saravananஅந்த தேவா கௌடா பிரதமர் ஆக துணை நின்றவர் கருணாநிதி, மேலும் கர்நாடக அணைகள் கட்டிக்கொள்ள அனுமதி கொடுத்த வள்ளலும் அவரே...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-ஆக-202119:32:26 IST Report Abuse
தமிழவேல் நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டும். தமிழகம், தண்ணீருக்கு மற்ற மாநிலங்களை எதிர்பார்த்திருக்கும் நிலையில் இருக்கும்போது, நாம்தான் அதற்கு போராட வேண்டும். வேறு யாரையும் எதிர்பார்க்க முடியாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X