மேகதாது அணை விவகாரம்; பா.ஜ., இன்று உண்ணாவிரதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேகதாது அணை விவகாரம்; பா.ஜ., இன்று உண்ணாவிரதம்

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (31)
Share
சென்னை : மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை, கர்நாடக அரசு கைவிட வலியுறுத்தி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில், தஞ்சையில் இன்று(ஆக.,5) உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.தமிழகத்துக்கு எதிரான மேகதாது அணை கட்டும் திட்டத்தை, கர்நாடக அரசு கைவிட வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் தஞ்சை மாவட்டம் பனகல் பில்டிங் அருகில் இன்று காலை 9:00 முதல், மாலை 5:00 மணி வரை உண்ணாவிரத போராட்டம்
BJP, Annamalai, Bharatiya Janata Party

சென்னை : மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை, கர்நாடக அரசு கைவிட வலியுறுத்தி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில், தஞ்சையில் இன்று(ஆக.,5) உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

தமிழகத்துக்கு எதிரான மேகதாது அணை கட்டும் திட்டத்தை, கர்நாடக அரசு கைவிட வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் தஞ்சை மாவட்டம் பனகல் பில்டிங் அருகில் இன்று காலை 9:00 முதல், மாலை 5:00 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகிக்கிறார். உண்ணாவிரதத்தில் பா.ஜ., மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


latest tamil news



மேலும், அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், டெல்டா விவசாயிகள் என, 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.ஜான் பாண்டியன் ஆதரவுஉண்ணாவிரத போராட்டத்திற்கு, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர், தமிழக பா.ஜ., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமியிடம் நேற்று வழங்கினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X