அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகும் கமல் கட்சி

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
கோவை : உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளுடன் பேச ஆரம்பித்திருக்கிறார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்.கடந்த சட்டசபை தேர்தலில், கோவை தெற்கில் போட்டியிட்ட கமல் கூட, 1,500 ஓட்டுகள் வித்தியாசத்தில், தோல்வியை தழுவினார். அதேநேரம், மாவட்டத்தில், 10 தொகுதிகளிலும் தி.மு.க.,வின் தோல்விக்கு, ம.நீ.ம., காரணமாக இருந்தது. மாநகராட்சி பகுதியில் மட்டும், 2 லட்சம்
Kamal, Kamal Haasan, MNM

கோவை : உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளுடன் பேச ஆரம்பித்திருக்கிறார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்.

கடந்த சட்டசபை தேர்தலில், கோவை தெற்கில் போட்டியிட்ட கமல் கூட, 1,500 ஓட்டுகள் வித்தியாசத்தில், தோல்வியை தழுவினார். அதேநேரம், மாவட்டத்தில், 10 தொகுதிகளிலும் தி.மு.க.,வின் தோல்விக்கு, ம.நீ.ம., காரணமாக இருந்தது. மாநகராட்சி பகுதியில் மட்டும், 2 லட்சம் ஓட்டுகளை, ம.நீ.ம., வேட்பாளர்கள் பெற்றிருந்தனர். அதன் காரணமாகவே, துணை தலைவராக இருந்த மகேந்திரனை, தி.மு.க., தன் பக்கம் இழுத்தது.

இது, கமலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், மகேந்திரன் சென்றதால், கட்சிக்கு எவ்விதத்திலும் பாதிப்பில்லை என்பதை காட்டுவதற்காகவும், வாக்காளர்களுக்கு நன்றி சொல்லவும், இரு நாள் நிகழ்வாக கோவை வந்தார். ஆனால், கோவையில் மீண்டும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்.


latest tamil news


கட்சி நிர்வாகிகள் வீட்டுக்குச் சென்று, மதிய உணவு உட்கொண்டு, தொண்டர்களுடன் ஆலோசித்தார். தொற்று பாதிப்புக்குள்ளாகி, உயிரிழந்தவர்கள் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறினார். கீழ்மட்ட அளவில் கட்சியை பலப்படுத்துவது, உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்து, நிர்வாகிகளுடன் விவாதித்தார்.

ம.நீ.ம., நிர்வாகிகள் கூறுகையில், 'ரத்து செய்யப்பட்ட கொடியேற்று விழாக்கள், உள்ளூர் நிர்வாகிகள் தலைமையில் நடத்தப்படும். தொற்று கட்டுக்குள் வந்ததும், கோவைக்கு மீண்டும் கமல் வருவார். பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு வருகிறோம். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, ஆலோசித்து வருகிறோம். எந்த ஒரு தேர்தல் நடந்தாலும், கண்டிப்பாக களத்தில் சந்திப்போம். இரு திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஆக-202105:18:37 IST Report Abuse
ராஜா சீரியல் செட்டை பாத்துட்டா பார்ட்டி வைத்தே ஆகவேண்டும். திமுகவை களத்தில் எதிர்க்காமல் மம் என்று இருந்தால் கடைசிவரை பி டீம் தான்.
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
05-ஆக-202116:38:32 IST Report Abuse
SUBBU ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் அசிங்கப்பட்டது பத்தாதா?
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
05-ஆக-202115:18:47 IST Report Abuse
Vijay D Ratnam கமல்ஹாசனும் சைமன் செபஸ்டியனும் ஹிந்து வாக்குகளை டேமேஜ் செய்து திமுகவுக்கு வெற்றியை கொண்டு சேர்க்க மதமாற்ற மாஃபியாக்களால் நியமிக்கப்பட்ட ஏஜென்ட்டுகள். இஸ்லாமியர்களோ கிருஸ்தவர்களோ இந்தக்கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை வாக்களிக்கவும் மாட்டார்கள். சைமனை விடுங்க சாக்கடை, இப்புடி ஒரு ஈன பிழைப்பு பொழைக்குறது கமலுக்கு தேவையா. இதன் மூலம் அந்தாள் ரசிகர்களையும் இழந்துக்கொண்டு இருக்கிறார். அரைவேக்காட்டுக்கும் அறிவாளிக்கும் உள்ள வித்தியாசத்தை ஹிந்துக்கள் இப்போதுதான் உணர ஆரம்பித்து இருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X