பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா பேட்ச்' புறக்கணிக்கப்படாது!

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
நடப்பு, 2021ம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்து, வெளியே வரும் மாணவர்கள், வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை என்று எழுந்த சர்ச்சைக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய பகுதிகளில், 'கிளை விற்பனை அலுவலராக' பணியாற்ற, நேர்முகத் தேர்வுக்கு வரச் சொல்லி, எச்.டி.எப்.சி. வங்கி விளம்பரம் சமீபத்தில் வெளியானது. அதில், '2021ம் ஆண்டில்
Corona Batch, Job, HDFC

நடப்பு, 2021ம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்து, வெளியே வரும் மாணவர்கள், வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை என்று எழுந்த சர்ச்சைக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய பகுதிகளில், 'கிளை விற்பனை அலுவலராக' பணியாற்ற, நேர்முகத் தேர்வுக்கு வரச் சொல்லி, எச்.டி.எப்.சி. வங்கி விளம்பரம் சமீபத்தில் வெளியானது. அதில், '2021ம் ஆண்டில் தேர்ச்சி பெற்று வெளியே வந்தவர்கள், விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்' என்ற சர்ச்சைக்குரிய வரி இருந்தது.

அதாவது, 2021ல் வெளிவந்த மாணவர்கள், 'கொரோனா பேட்ச்' என்று, அழைக்கப்படுகின்றனர். அவர்கள் முறையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பே கிடைக்காது; பெரிய நிறுவனங்கள் எதுவும் மதிக்காது என்று, விமர்சனம் வைக்கப்படுகிறது.


latest tamil news


இதற்கு வலுசேர்ப்பது போல், எச்.டி.எப்.சி.,யின் விளம்பரம் அமைந்தது. பல்வேறு சமூக வலைதளங்களில், அந்த விளம்பரம் சுற்றி வந்ததோடு, பெற்றோர் மனதில் கலக்கத்தையும் அதிகப்படுத்தியது.

இந்த விளம்பரம் உண்மை தானா என்பதை அறிய, மும்பையில் உள்ள, எச்.டி.எப்.சி.,யின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: அது தவறுதலாக வெளியாகிய விளம்பரம். பின்,சரியான விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில், குறிப்பிடப்பட்டுள்ள வயது வரம்புக்குள் உள்ள இளைஞர்கள், எந்த ஆண்டில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது. அதைப் பார்த்து, 200 பேர் நேர்முகத் தேர்வுக்கு வந்தனர். அதில் பலர், 2021ல் தேர்ச்சி பெற்றவர்கள் தான்.இவ்வாறு அவர் கூறினார்.

முதல் விளம்பரத்தை, உள்ளூரில் உள்ள வங்கியின் ஏஜென்சி வெளியிட்டதாகத் தெரிகிறது.கொரோனா பேட்ச் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது என்று எழுந்த வதந்திக்கு, இதன் வாயிலாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani K - Namakkal,இந்தியா
05-ஆக-202115:20:45 IST Report Abuse
Mani K அதற்குள் மற்ற :ஆங்கிலம்" தெரிந்த அறிவு-ஜீவிகள் ஒத்து ஊத ஆரமித்துவிட்டனர் ஹா.. ஹா.. ஹா..
Rate this:
Cancel
Mani K - Namakkal,இந்தியா
05-ஆக-202115:19:00 IST Report Abuse
Mani K முதலில் அந்த விளம்பரத்தை ஒழுங்காக படிக்கவும். அவர்கள் காரோண தேர்ச்சி பெற்றவரும் தகுதியானவர்தான் என்று விளம்பரம் செய்துள்ளது... ஊஊஊ...
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
05-ஆக-202112:53:40 IST Report Abuse
vbs manian நிச்சயம் காரோண சாயல் நிச்சயம் காரோண நிழல் இந்த மாணவர்கள் மீது விழும். சம்பளம் கொடுப்பவர்கள் நிச்சயம் தகுதியை எதிர்பார்ப்பார்கள். அரசியல்வாதிகள் செய்த கோளாறுகள் பாதிக்கும். கருமா திருமா சீமா காப்பாற்ற முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X