பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் கருணாநிதி படம்: 27 நாட்களில் உருவான ஓவியம்: வரைந்த கதையை சொல்கிறார் ஓவியர் கோபி

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (61)
Share
Advertisement
அறுபது ஆண்டுகளுக்கும் மேல், சட்டசபையில் ஒருவர் குரல் ஒலித்திருக்கிறது என்றால், அது, முன்னாள் முதல்வர் கருணாநிதியுடையது. அவரது உருவப்படம், தமிழக சட்டசபையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தால் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. கருணாநிதியின் படத்தை வரைந்த ஓவியர், 'அரசு ஆர்ட்ஸ்' கோபி.அவர் அளித்த பேட்டி:என் தந்தை சுந்தரேசன், திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சியை சேர்ந்தவர்.
D.M.K,karunanidhi,கருணாநிதி,தி.மு.க

அறுபது ஆண்டுகளுக்கும் மேல், சட்டசபையில் ஒருவர் குரல் ஒலித்திருக்கிறது என்றால், அது, முன்னாள் முதல்வர் கருணாநிதியுடையது. அவரது உருவப்படம், தமிழக சட்டசபையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தால் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. கருணாநிதியின் படத்தை வரைந்த ஓவியர், 'அரசு ஆர்ட்ஸ்' கோபி.


latest tamil newsஅவர் அளித்த பேட்டி:என் தந்தை சுந்தரேசன், திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சியை சேர்ந்தவர். பிறவி ஓவிய கலைஞர். ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதியால், தந்தை உருவாக்கிய, அரசு ஆர்ட்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து நடத்தி வருகிறேன்.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், சட்டசபையில் கருணாநிதியின் உருவப்படம் வைக்கத் தீர்மானித்தனர். கருணாநிதியை ஓவியமாக வரையும் பொறுப்பு, எங்கள் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது. இதற்காக, சட்டசபைக்கு, எங்கள் குழுவினரை அழைத்து சென்றனர். அங்கு எந்த இடத்தில், படம் அமைக்க வேண்டும் என்பதை காட்டினர்.
ஏற்கனவே, 15 தலைவர்களின் படங்கள், அங்கு உள்ளன. அந்த படங்கள், ஆறு அடிக்கு, நான்கு அடி என்ற அளவில் இருந்தன. அதே அளவில் வேண்டும் என்றனர். ஒரு மாதத்தில் முடிக்க கூறினர். ஏற்கனவே வரையப்பட்ட தலைவர்களின் ஓவியங்கள், 'ஆயில் பேஸ்டல் கேன்வாஷ்' துணியில் தான் இருந்தன. அந்த துணியில், சிறப்பு, 'பெயின்ட்' மூலம் ஓவியம் வரையும்போது, அது, 200 ஆண்டுகளானாலும் கெட்டுப் போகாது.உலகின் புகழ்பெற்ற ஓவியங்கள் அனைத்தும், இதுபோல் தான் வரையப்பட்டுள்ளன.

இத்தகவலை கூறியதும், அதிகாரிகள் உடனே, 'ஓகே' கூறினர். முதல்வர் ஸ்டாலினும், 'அப்படியே செய்யலாம்' என கூறி விட்டார்.சட்டசபையில் உள்ள மற்ற படங்கள், நிற்கும் நிலையில் வரையப்பட்டவை என்பதால், கருணாநிதி படமும், 'அதேபோல் இருக்க வேண்டும்' என, கூறினர். கருணாநிதிக்கு மிகவும் பிடித்த, அவரது பேனா, புத்தகங்கள் நிறைந்த அலமாரி, உள் ஓவியமாக, அவர் விரும்பி உருவாக்கிய, கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, கைக் கடிகாரம் ஆகியவை, ஓவியத்தில் இருக்க வேண்டும் என, ஸ்டாலின் விரும்பினார்.

இந்த ஓவியம் வரையும்போது, பெயின்ட் காய்வதற்கு, நான்கு நாட்களாகும். 'டார்க் கலர்' மற்றும் மங்கலான வண்ணம் என, பெயின்ட்களை மாற்றி மாற்றி வரையும் போது, பல நாட்கள் எடுக்கும். ஓவியம் முழுமையாக வரைந்து முடிக்க, 27 நாட்கள் ஆகின.எங்கள் குழுவில், 22 பேர் இருந்தனர். ஓவியத்தில், ஒவ்வொருவரின் கைவண்ணமும் இருக்கிறது. ஆளாளுக்கு ஒரு பணி செய்தனர். தவறுகளை திருத்த இருவர் இருந்தனர். அவர்கள் வேலையே, குற்றம் கண்டுபிடிப்பது தான். படம் வரையும் நிலையிலேயே, எங்கு தவறு இருக்கிறதோ, அதை நுணுக்கமாக கணித்துச் சொல்வர்.

அதை, அவ்வப்போது நிவர்த்தி செய்து கொண்டே வந்தோம்.ஓவியத்தை உற்று நோக்கினால், யானையின் மேல் கருணாநிதி கை வைத்திருப்பது போல இருக்கும். தமிழ் மொழியின் கம்பீரத்தையும், தமிழ் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பவர் கருணாநிதி என்பதையும் உணர்த்தும் வகையில், யானை சிலை மீது கை வைத்திருப்பது போல், ஸ்டாலின் வரைய சொன்னார். அவர் வாழ்ந்த, சென்னை, கோபாலபுரம் வீட்டிலும், யானை சிலை ஒன்று இருக்கிறது.

ஓவியத்தில், கதவு ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்த கதவு, ஓர் அறைக்குள் கருணாநிதி நிற்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். 'நுால்கள் நிறைந்த தனது வீடு தான் உலகம்' என்று, அடிக்கடி கருணாநிதி கூறுவார். அதையே தான் ஓவியமும் கூறுகிறது.கருணாநிதியின் படம், அவரது மொத்த வாழ்க்கையையும் கூறும்படி அமைக்கப்பட்டது.

குறிப்பாக, ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். படம் வரைய முற்படும் முன், பெரிய படத்தின், 'மினியேச்சர்' வரைந்து, அதுபோல தான், பெரிய படமும் இருக்கும் என்பதை ஸ்டாலினுக்கு காட்டினோம்.படம் வரைந்து முழுமை பெறும் சூழலில், ஸ்டாலின் வந்து பார்த்தார். கருணாநிதி, தன் கரங்களில் மோதிரம் அணிந்திருப்பார். அதனால், 'இரு கை விரல்களிலும் மோதிரம் இருக்க வேண்டும்; சட்டை காலரில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும்' என, சொன்னார்.மற்றபடி, பெரிய மாற்றம் எதையும் செய்ய சொல்லவில்லை.

கருணாநிதியின் படத்தை பார்த்து விட்டு, ஓவியர்கள், பொது மக்கள் பாராட்டுகின்றனர். இவ்வாறு, கோபி கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
06-ஆக-202113:57:27 IST Report Abuse
Vena Suna நல்ல தமிழ் வசனங்கள் எழுதினார் கலைஞர். தமிழை வளர்த்தார் ,அதன் கம்பீரத்தை வளர்த்தார் என்பதெல்லாம் கழகம் வளர்த்த விஷயங்கள். தமிழை காத்து தமிழ் தாத்தா, உவே சா. ,மற்றும் பல அருமை பெருமை வாய்ந்த தமிழ் அறிஞர்கள்.அவர்கள் முன் கருணாநிதி மிக சாதாரணம்.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
06-ஆக-202110:43:58 IST Report Abuse
Narayanan உனக்கு என்னப்பா அரசின் கஜானாவில் இருந்து கொட்டி கொடுத்து விட்டார்கள் . மாக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டது? விலைவாசி குறைந்ததா ? பாலும் தேனும் ஓட தொடங்கிவிட்டதா? அரசி கஜானாவில் இருந்து தேவையற்ற சிலவு
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
06-ஆக-202110:41:19 IST Report Abuse
Matt P எல்லாம் சொன்னீங்க .. ஒன்னு மட்டும் விட்டுடீங்க. ..எவ்வளவு பணமா கொடுத்தாங்கன்னு சொன்நா, மக்கள் பணம் எவ்வளவு செலவாச்சுன்னு தெரிஞ்சுக்குவோம். ..பணக்கார மனைவிகளுக்கு கணவன் தாஜ் மகால் தான் கட்ட முடியாது.. இப்படி படம் வரைய ஆர்டர் கொடுப்பாங்க இல்லையா? உங்களுக்கும் யாபாரம் பிச்சுக்கிட்டு போகும் .அப்புறம் தலைவர் படம் வரைஞ்ச ராசின்னு சந்தோசப்பட்டுக்கிடுவீங்க. அரசு பணம் தானே தாராளமா கஓடை வள்ளல் பாரி மாதிரி கொடுத்திருப்பாங்க. ..ஒரு ஒரு கோடி ஆயிருக்குமா? ..சீக்கிரம் சொல்லுப்பா ..தலையை பிச்சுகிட வேண்டியதாயிருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X