பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ்களில் இரட்டை கட்டண முறை: ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை

Added : ஆக 05, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
தமிழகத்தில் அரசு நிர்ணயித்ததை விட, அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வாங்குவது தி.மு.க., ஆட்சியிலும் தொடர்கிறது.தேர்தல் வாக்குறுதியின்படி, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அரசு டவுன் பஸ்களில், பெண்களுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டு வருகிறது. தினமும் 30 லட்சம் பெண்கள், இலவசமாக அரசு பஸ்களில் பயணம் செய்வதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க.,
அரசு பஸ், இரட்டை கட்டணம், ஆட்சி,காட்சி, மாறவில்லை

தமிழகத்தில் அரசு நிர்ணயித்ததை விட, அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வாங்குவது தி.மு.க., ஆட்சியிலும் தொடர்கிறது.

தேர்தல் வாக்குறுதியின்படி, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அரசு டவுன் பஸ்களில், பெண்களுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டு வருகிறது. தினமும் 30 லட்சம் பெண்கள், இலவசமாக அரசு பஸ்களில் பயணம் செய்வதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில், 'தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பயணத்தை அனுமதிப்பதால் ஏற்படும் இழப்பை சரி செய்ய, ஆண்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதை மறுத்த ராஜகண்ணப்பன், 'குறைந்தபட்ச கட்டணம் ஐந்து ரூபாய் என்பது உயர்த்தப்படவேயில்லை' என்று விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரத்தில், இருவருமே பொய்யான தகவல் கூறுவதாக, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அரசு பஸ்களிலேயே அதிக கட்டணம் வாங்குவது, பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த இரட்டை முறை கட்டணத்தை அறிமுகப்படுத்தியதே, தி.மு.க., அரசுதான்.சாதாரண டவுன் பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வாங்கிய அரசு போக்குவரத்துக்கழகங்கள், 2010ம் ஆண்டில், ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தில் வாங்கப்பட்ட பஸ்களுக்கு, சொகுசு பஸ் என்று பெயரிட்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்கத் துவங்கின.


latest tamil newsஇதைக் அ.தி.மு.க., கடுமையாக விமர்சித்து வந்தது.ஆனால், 2011ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னும் இதை குறைக்கவில்லை. 2016ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பின்னும் இது தொடர்ந்தது. முன்பிருந்ததை விட சொகுசு பஸ்களில் கட்டணம் மேலும் உயர்த்தப்பட்டது.கடந்த பத்தாண்டுகளில் மட்டும், தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் அதிகமான டவுன் பஸ்களுக்கு, கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக, ஆர்.டி.ஓ.க்களால் சார்ஜ் செய்யப்பட்டு, கலெக்டர்களால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் மட்டும், 2000 அரசு பஸ்கள் அபராதம் செலுத்தியுள்ளன. ஆனாலும், இப்போது வரையிலும் கூடுதல் கட்டணமே வசூலிக்கப்படுகிறது.ஆட்சி மாற்றம் நடந்த பின்னும், இந்த இரட்டைக் கட்டண முறை தொடர்கிறது. டவுன் பஸ்களில் மட்டுமின்றி, மொபசல் பஸ்களிலும் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. பாயின்ட் டூ பாயின்ட், பைபாஸ் ரைடர் என அதற்கு ஏதாவது ஒரு பெயரிட்டு, கூடுதல் கட்டணம் வசூலித்து நியாயப்படுத்தி வருகின்றனர்.

-நமது நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஆக-202119:39:31 IST Report Abuse
அப்புசாமி இந்தப் பக்கம் தாய்மார்களுக்கு இலவசம்னு குடுப்பாங்க. அந்தப் பக்கம் இரட்டைக் கட்டணம்னு உருவிடுவாங்க. இவிங்க செஞ்சா ஓக்கே... ஆம்னி பஸ் காரங்க செஞ்சா வயதெரிச்சல்ல கேஸ் போடுவாங்க.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
05-ஆக-202117:42:03 IST Report Abuse
Narayanan The previous government was changed the bus from ordinary to luxury and express . by doing that they charged . Now this government is charging in the same bus for gents double the rate and for ladies with concession rate. so we can not compare and say even the government change the looting in charges is continue . If AIADMK government was taking the jewel from ear this government is taking away the jewel with the ear.
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
05-ஆக-202117:03:03 IST Report Abuse
R.RAMACHANDRAN பல பெயரிட்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.சாதாரண பேருந்து மற்றும் நகர பேருந்துகள் அரசு ஆணை மூலம் செய்த கட்டணத்தை வசூலிக்காமல் கூடுதலாக வசூலிப்பது குறித்து முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு புகார் செய்தும் குற்றவாளிகளுக்கே அனுப்பி புகாரை ஒன்றுமில்லாமல் செய்தனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X