தி.மு.க., போடும் வேஷத்தை நன்கு அறிந்துள்ளீர்களே...

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
தமிழகத்தில் ஆட்சியை தக்க வைக்க, மத்திய அரசை அண்டிப் பிழைக்க, தி.மு.க., தயார் ஆகி இருக்கலாம். இதெல்லாம் அவர்களுக்கு புதிதல்ல. இவர்கள் போட்ட போலி நாடகத்தை முழுமையாக நம்பி ஏமாந்து போன தமிழக கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும், எண்ணற்ற இளைஞர்களும் இனிமேலாவது விழித்துக் கொள்வரா?- புதிய தமிழகம் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி'தி.மு.க., போடும் வேஷத்தை நன்கு
தி.மு.க., போடும் வேஷத்தை நன்கு அறிந்துள்ளீர்களே...

தமிழகத்தில் ஆட்சியை தக்க வைக்க, மத்திய அரசை அண்டிப் பிழைக்க, தி.மு.க., தயார் ஆகி இருக்கலாம். இதெல்லாம் அவர்களுக்கு புதிதல்ல. இவர்கள் போட்ட போலி நாடகத்தை முழுமையாக நம்பி ஏமாந்து போன தமிழக கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும், எண்ணற்ற இளைஞர்களும் இனிமேலாவது விழித்துக் கொள்வரா?
- புதிய தமிழகம் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி


'தி.மு.க., போடும் வேஷத்தை நன்கு அறிந்துள்ளீர்களே...' எனக் கூறத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை.தனிமனித அந்தரங்கம் என்ற போர்வையில், தேசத்தின் பாதுகாப்பிற்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், 'பெகாசஸ்' விவகாரத்தை ஆயுதமாக எடுத்து, பார்லிமென்டில் மக்கள் பிரச்னைகளை விவாதிக்க மறுத்து, தேச துரோக குற்றத்தில் எதிர்க்கட்சிகள் ஈடுபடுவது ஏன்?
- தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி


'பதில் நன்கு தெரிந்தது தான். அடுத்து ஆட்சிக்கு வர இப்போதே ஒன்றிணைகின்றனர். அவர்கள் எண்ணம் நிறைவேறுமா என்பது, பா.ஜ., செயல்பாட்டில் தான் உள்ளது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.சங் பரிவார் அமைப்பினரின் பொருளாதாரம் என்பது யாதெனில், இந்தியாவை இரண்டு குஜராத்திகளுக்கு விற்பது, இரண்டு குஜராத்திகள் வாங்குவது; அவ்வளவு தான்.
- தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்


latest tamil news
'அப்போ, குஜராத்திகள் வாங்கிய இந்தியாவில் தான் கம்யூ.,க்களும் அரசியல் செய்கின்றனரா...' என, கிடுக்கிப்பிடி போடத் தோன்றும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை.காலையில் நல்ல ருசியான டிபன் சாப்பிட்ட பின், 11 எதிர்க்கட்சி தலைவர்களும், பார்லிமென்டில் எப்படி ஒற்றுமையாக செயல்படுவது, பா.ஜ.,வின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக எப்படி போராடுவது என கூடி பேசினோம்.
- திருவனந்தபுரம் காங்., - எம்.பி., சசி தரூர்


'சைக்கிள் மிதிக்க நல்ல தெம்பு வேண்டும் என்பதற்காக, காலை டிபன் ஸ்ட்ராங்காக சாப்பிட்டிருப்பீர்கள் போலிருக்கிறதே...' என, கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், திருவனந்தபுரம் காங்., - எம்.பி., சசி தரூர் அறிக்கை.சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு சில அரசு நிகழ்ச்சிகளுக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. 'நம்மை ஏன் தவிர்க்க வேண்டும்' எனக் கட்சிக்காரர்கள் ஆதங்கப்பட்டனர். எதனால் எங்களுக்கு அழைப்பு மறுக்கப்பட்டது என தெரியவில்லை.
- பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி


'அவர்கள் துவக்கி வைக்கும் அரசு நிகழ்ச்சிகளுக்கான நிதி, மத்திய அரசுடையது என உங்களைப் போன்றவர்கள் சொல்லி விடுவர் என்ற அச்சம் காரணமாக இருக்குமோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், மொடக்குறிச்சி தொகுதி, பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி பேட்டி.


Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAVIKUMAR - chennai,இந்தியா
05-ஆக-202116:12:51 IST Report Abuse
RAVIKUMAR "" சைக்கிள் மிதிக்க நல்ல தெம்பு வேண்டும் என்பதற்காக, காலை டிபன் ஸ்ட்ராங்காக சாப்பிட்டிருப்பீர்கள் போலிருக்கிறதே...""...வேற என்ன செய்றது ....பணக்கார காளான் ஸூப் குடிக்க முடியாதில்ல..
Rate this:
Cancel
RAVIKUMAR - chennai,இந்தியா
05-ஆக-202115:57:17 IST Report Abuse
RAVIKUMAR ஜிங் சக்...காதை பிளக்குது ...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
05-ஆக-202114:00:55 IST Report Abuse
sankaseshan Siddhartha நல்ல கருத்துக்களுக்கும் டெபொசிட்டுக்கும் என்ன சம்மந்தம் குஜராத்திகளை பற்றி கவலைபடும் லூசு அருண் நம்ம நாடு சீனாவைவிட பின் தங்கினால் சந்தோஷ படுவான் சுயநல எதிரி கட்சி கல் கனவில்கூட பதவிக்கு வர முடியாது திருப்பதி சொன்னது சரிதான்
Rate this:
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
05-ஆக-202116:04:42 IST Report Abuse
Sidhaarthநண்பரே தி மு க/ அ தி மு க சரியோ தவறோ மக்களின் அபிமானத்தை பெற்ற கட்சிகள். இவர்கள் கட்சி என்னத்தை சாதித்தது.நாக்பூரில் போய் சரணடைந்ததை தவிர. இவர்கள் வளர்ந்து ,நாட்டு மக்களுக்கு சேவை செய்து விமர்சிக்கட்டும். கம்யூனிஸ்ட்டுகளை பற்றி.... அவர்கள் பலமில்லாதவர்களக இருக்கலாம் ஆனால் அடித்தட்டு மக்களுக்கு ஒன்று என்றால் முதலில் களத்துக்கு வருவது அவர்கள்தான். உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். நான் கண்ணால் கண்டவன். உங்களுக்கு எப்படி கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க உரிமை உண்டோ அது போல் பாராட்ட எனக்கு உரிமை உண்டு .நன்றி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X