சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மூலப்பொருளாகும் காற்று மாசு!

Added : ஆக 05, 2021
Share
Advertisement
காற்றில் கலக்கும் மாசுக்களை பயனுள்ள பொருட்களாக உருமாற்றும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. குறிப்பாக, கார்பன் டை ஆக்சைடினை பயனுள்ள வேதிப்பொருட்களாக மாற்றும் தொழில்நுட்பம் ஒன்றை முன்வைக்கிறது அமெரிக்காவை சேர்ந்த 'டுவெல்வ்' என்ற புத்திளம் நிறுவனம்.சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை எடுத்து, அந்த ஆற்றலை வைத்து காற்று மாசுக்களிலிருந்து கார்பனை பிரித்தெடுக்கிறது
மூலப்பொருளாகும் காற்று மாசு!

காற்றில் கலக்கும் மாசுக்களை பயனுள்ள பொருட்களாக உருமாற்றும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. குறிப்பாக, கார்பன் டை ஆக்சைடினை பயனுள்ள வேதிப்பொருட்களாக மாற்றும் தொழில்நுட்பம் ஒன்றை முன்வைக்கிறது அமெரிக்காவை சேர்ந்த 'டுவெல்வ்' என்ற புத்திளம் நிறுவனம்.

சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை எடுத்து, அந்த ஆற்றலை வைத்து காற்று மாசுக்களிலிருந்து கார்பனை பிரித்தெடுக்கிறது டுவெல்வின் தொழில்நுட்பம். பின் அந்த கார்பனை மூலப் பொருளாக வைத்து பல வகை நடைமுறைப் பொருட்களை செய்ய முடியும்.

உதாரணமாக, ஜெட் விமானங்களுக்கான எரிபொருள், கண் கண்ணாடிக்குத் தேவையான லென்ஸ் போன்றவற்றை தயாரிக்கலாம் என்கிறார் டுவெல்வின் இணை நிறுவனர் நிகோலாஸ் பிலான்டெர்ஸ். காற்று மாசுக்களிலிருந்து கார்பனை பிரிப்பது, காற்று மாசின் அளவை மெல்ல மெல்லக் குறைக்கும். தவிர, அதிலிருந்தே எரிபொருளை தயாரிப்பது, பெட்ரோலிய பொருட்களின் தேவையையும் குறைக்கும்.

கடந்த ஆண்டு முதல், இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மெர்சிடிஸ் பென்சுக்கு சில வாகன உதிரி பாகங்களை, டுவெல்வ் தயாரித்து தருகிறது. மேலும், 'புரோக்டர் அண்டு கேம்பிளின், டைடு' சோப்புத் துாளில் கலப்பதற்குத் தேவையான சில மூலப்பொருட்களையும் டுவெல்வ் உற்பத்தி செய்து கொடுக்கிறது. அதுமட்டுமல்ல, 'ஷெல், ரெப்சோல், சோகால்கேஸ்' போன்ற நிறுவனங்களுக்கும், காற்று மாசு கார்பனை எடுத்து பயனுள்ள பொருட்களை தயாரித்து தரும் ஆராய்ச்சியை டுவெல்வின் விஞ்ஞானிகள் தொடர்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X