சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ஓடத் தெரிந்த ரோபோ!

Added : ஆக 05, 2021
Share
Advertisement
இரண்டு கால் ரோபோவான 'கேசி', மிகவும் வித்தியாசமானது. தடுமாறி விழாமல் வேகமாக நடக்கும் திறன் கொண்ட கேசி, அண்மையில் வேகமாக ஓடிக் காட்டியும் அசத்தியுள்ளது.அமெரிக்காவிலுள்ள ஓரிகன் மாநில பல்கலையின் வளாகத்திற்குள், 53 நிமிடங்களில் ஐந்து கி.மீ., தொலைவு வரை ஓடிக் காட்டியது கேசி ரோபோ.ஓரிகன் ஆராய்ச்சியாளர்கள், நெருப்புக் கோழியின் கால்களை முன்மாதிரியாகக் கொண்டு கேசியை
 ஓடத் தெரிந்த ரோபோ!

இரண்டு கால் ரோபோவான 'கேசி', மிகவும் வித்தியாசமானது. தடுமாறி விழாமல் வேகமாக நடக்கும் திறன் கொண்ட கேசி, அண்மையில் வேகமாக ஓடிக் காட்டியும் அசத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள ஓரிகன் மாநில பல்கலையின் வளாகத்திற்குள், 53 நிமிடங்களில் ஐந்து கி.மீ., தொலைவு வரை ஓடிக் காட்டியது கேசி ரோபோ.

ஓரிகன் ஆராய்ச்சியாளர்கள், நெருப்புக் கோழியின் கால்களை முன்மாதிரியாகக் கொண்டு கேசியை உருவாக்கினர். கேசி ரோபோவிற்கு, நடந்தபடியே வேகத்தை அதிகரித்து ஓடவும், பின், வேகத்தை குறைத்து நடைக்கு மாறவும் தெரியும்.

கடந்த சில ஆண்டுகளாக நடக்கவும், படிகளில் ஏறவும் பயிற்சி பெற்றுவந்த கேசியிற்கு, ஓடும் திறனைத் தருவதற்காக, இயந்திர கற்றல் மென்பொருளில் சிறப்பு நிரல்களை ஆராய்ச்சியாளர்கள் எழுதினர்.

இந்த நிரல்கள் மூலமும், 'ரிமோட் கன்ட்ரோல்' கருவி மூலம் கட்டுப்படுத்தியும் கேசி ரோபோ , சமதள சாலைகளில் ஓடிக் காட்டியது.வருங்காலத்தில், டெலிவரி சேவைகளில் ஈடுபடுத்த கேசி ரோபோக்கள் உதவும் என, இதன் படைப்பாளர்கள் நம்புகின்றனர். கேசியிற்கு இடுப்பு, கால்கள், சிறிய பாதங்கள் மட்டுமே உண்டு.

இடுப்புப் பகுதியில் ஒரு பெட்டியை பொருத்தினால், அதில் சில துாதஞ்சல்கள், சரக்குகளை வைத்து அனுப்ப முடியும். இந்த ரோபோக்கள் சரக்கு வேனிலிருந்து இறங்கி, வீட்டு வாசலுக்கு போய் சரக்கை உரிமையாளரிடம் தந்துவிட்டு திரும்பி வேனுக்கே வந்துவிடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X