ஜெனிவா: கோவிட் வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நாடுகளும், பணக்கார நாடுகளும் தங்கள் மக்களுக்கு, 2 டோஸ் தடுப்பூசியை செலுத்திய பின், 'பூஸ்டர்' டோசும் செலுத்த விரும்புகின்றன. ஆனால் இன்னும் பல ஏழை நாடுகளில், பெரும்பாலான மக்களுக்கு மட்டுமின்றி முன்களப் பணியாளர்களுக்குக் கூட, தடுப்பூசியின் ஒரு டோஸ்கூட கிடைக்கவில்லை.
இதனால், ஏழை நாடுகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசி 10 சதவீதத்தினருக்காவது கிடைப்பதை உறுதி செய்ய உதவும் வகையில், பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், 'ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவது, கோவிட் பரவலைத் தடுப்பதில் பயன் தருமா என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய பணக்கார நாடுகள் உதவ வேண்டும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE