கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சாமானியர்கள் வரிக்கட்டும்போது கார் வாங்கும் நீங்கள் ஏன் வரி செலுத்த மறுக்கிறீர்கள்?: தனுஷ்-க்கு ஐகோர்ட் கண்டனம்

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (128)
Share
Advertisement
சென்னை: இறக்குமதி சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் தாக்கல் செய்த வழக்கில், ‛சாமானியர்கள் வரிக்கட்டும்போது, கார் வாங்கும் நீங்கள் ஏன் வரி கட்டுவதை மறுக்கிறீர்கள்,' என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் தனுஷ்-க்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.கடந்த 2015ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு நுழைவு வரி ரூ.60.66 லட்சம்
Dhanush, ChennaiHC, Entry Tax Exemption, Case, நடிகர் தனுஷ், சென்னை, உயர்நீதிமன்றம், நுழைவு வரி விலக்கு,

சென்னை: இறக்குமதி சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் தாக்கல் செய்த வழக்கில், ‛சாமானியர்கள் வரிக்கட்டும்போது, கார் வாங்கும் நீங்கள் ஏன் வரி கட்டுவதை மறுக்கிறீர்கள்,' என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் தனுஷ்-க்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு நுழைவு வரி ரூ.60.66 லட்சம் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்தும், விலக்கு கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதன்படி கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் 50 சதவீதம் வரி செலுத்தினால் காரைப் பதிவு செய்ய ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்தவகையில் ரூபாய் 30.33 லட்சம் வரி செலுத்தியதாக நடிகர் தனுஷ் கூறியதால் விதிகளைப் பின்பற்றிப் பதிவு செய்ய 2016ம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


சொகுசு காருக்கு வரிவிலக்கு கேட்ட தனுஷுக்கும் ஐகோர்ட் கண்டனம் விஜய்க்கு கண்டனம் தெரிவித்த அதே நீதிபதி

latest tamil news
அதன்பின் இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (ஆக.,05) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், ‛சோப்பு, பெட்ரோல் வாங்கும் சாமானிய மனிதர்கள் வரி செலுத்துகின்றனர், கார் வாங்கும் நீங்கள் ஏன் வரி செலுத்த மறுக்கிறீர்கள்? இந்தியாவில் சாமானிய மனிதர்களுக்கு ஒரு சட்டம், நடிகர் தனுஷ்க்கு ஒரு சட்டம் என்று இல்லை,' என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் கூறினார். மேலும், மனுவில் நடிகர் என்பதை தெரிவிக்காமல் நுழைவு வரி விலக்கு கேட்டது ஏன் என்றும் தனுஷ்க்கு கேள்வி எழுப்பியதுடன், அதற்கு விளக்கமளிக்கவும் உத்தரவிட்டார்.


latest tamil newsஇதனைத்தொடர்ந்து, நுழைவு வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறுவதாக தனுஷ் தரப்பு கூறியதையும் ஏற்க மறுத்த நீதிபதி, தனுஷ் செலுத்த வேண்டிய நுழைவு வரி விவரங்களை இன்று பிற்பகல் வணிகவரித்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். ஏற்கனவே சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த உயர் நீதிமன்றம், அவரை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், ‛சொகுசு கார்களுக்கு வரி விலக்கு கோருவது போன்ற வழக்குகளால் நீதிமன்றத்தின் நேரம் வீணாகிறது,' எனக் கூறிய நீதிபதி, இறக்குமதி காருக்கான நுழைவு வரி பாக்கியான ரூ.30.3 லட்சத்தை 48 மணி நேரத்தில் செலுத்த தனுஷ்க்கு உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (128)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayaraman - Mumbai,இந்தியா
11-ஆக-202112:09:21 IST Report Abuse
jayaraman சம்பளம் 1 கோடி என்றால் அதற்கு வருமான வரி cess என 34-35 லட்சம் கட்ட வேண்டும். மீதியிருக்கும் 65 லட்சத்தில் ஒருவர் கார் வாங்கினால் அதற்கு customs duty, IGST, Road tax கட்டிய பின் state entrance tax வேறு கட்ட சொல்வது எந்த அளவுக்கு நியாயம் என்பது எனக்கு தெரிய வில்லை. அவர் கோர்ட்டுக்கு சென்று விலக்கு கேட்க முழு உரிமை உள்ளது. தீர்ப்பு சொல்ல 7-8 ஆண்டுகள் ஆனாலும் பாக்கியை 48 மணி நேரத்தில் கட்ட சொல்வது எந்த ஊர் நியாயம் என்று தெரிய வில்லை.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
10-ஆக-202109:45:09 IST Report Abuse
Matt P எல்லா வண்டியும் ஒரே மாதிரி தான் ஓடும். அமெரிக்காவில் எல்லாம் வண்டி எல்லாம் ஆடம்பர பொருள் இல்லை. தேவையான ஓன்று. நான் இருக்கிற நகரத்தில் பேரூந்துகள் எல்லாம் ஓடுகின்றன. இருந்தாலும் எல்லா பகுதிகளுக்கும் வண்டி செல்வதில்லை. ஒரு நாள் சொந்த வண்டி ஓடலைன்னா வேலைக்குப் போக முடியாது. வாடகை வண்டியில போகணும் இல்லாட்டி வீட்டில முடங்கி கிடைக்கணும். ..அந்தஸ்து தான் யலாத்துக்கும் காரணம் ..அரசியல்வாதிகள் திருடுகிறார்கள் என்றால் திருடின எல்லாத்தையும் அனுபவிக்கவா போகிறார்கள்? சாகும்போது நாலு பேர் திட்டுவாங்க அது செத்த காதுகளுக்கு போகவா போகிறது?இல்லையா? வெளிநாட்டில பொறந்து வளந்தது மாதிரி நினைப்பு. நினைச்சிட்டு போங்க.. ஆனால் இங்கே எல்லாம் ஒழுங்கா வரி எல்லாம் கட்டு விடுகிறார்களே. எவ்வளவு ஏழை மக்களுக்கு சினிமாவில் உதவுவது மாதிரி நடித்து இருப்பீர்கள் அதெல்லாம் நடிப்பு சரி தான். நாய் விற்ற காசு குறைக்கவா போகிறது? பணக்காரனாகிய எனக்கு மட்டும் வரி விலக்கு வேண்டும். அசிங்கமா இல்லையா? பெற்ற பெற்றவர்களையே மதிக்காத மக்கள் வாழும் நாட்டில் பெற்ற நாட்டை மதிக்காதவர்களும் இருக்க தான் இருப்பார்கள்.என்று தான் சொல்ல தோன்றுகிறது. ...ஏறி வந்த ஏணியின் கட்டுக்களை நினைத்து மறக்க வேண்டாமே.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
09-ஆக-202121:47:27 IST Report Abuse
bal இவனுக எல்லாம் வரியே கட்ட மாட்டான்..அதோட நம்ம மக்கள் படம் பார்க்கலேன்னா இவனுக பிச்சைக்காரனுகதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X