புதுடில்லி: 'நாட்டில் 26 மாநிலங்களில் 660 சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் மூலமாக 51,600 பாலியல் மற்றும் போக்ஸோ குற்ற வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டுள்ளது' என, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.
பாலியல் குற்ற வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் ஆயிரத்து-க்கும் மேற்பட்ட சிறப்பு விரைவு நீதிமன்றங்களின் செயல்பாட்டை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அமைச்சரவை நேற்று (ஆக., 4) அனுமதி அளித்தது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது:
Gratitude to PM @narendramodi Ji for approval continuation of Fast-Track Special Courts (FTSC) for rape & POCSO offences. Setup through NIRBHAYA Fund, FTSCs provide speedy justice to the victims and also act as a deterrent due to expeditious disposal & stringent punishment. pic.twitter.com/hhbsKCdmnF
— Smriti Z Irani (@smritiirani) August 4, 2021
26 மாநிலங்களில் 660 சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் மூலமாக இதுவரை 51,600 பாலியல் மற்றும் போக்ஸோ குற்ற வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்த விரைவு நீதிமன்றங்கள் மேலும் 2 ஆண்டுகளுக்கு தொடர்ந்து செயல்பட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கும் முடிவு, மேலும் அதிக எண்ணிக்கையில் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான வாய்ப்பை அளிக்கும். அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்கும்.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE