பொது செய்தி

இந்தியா

உலகிலேயே மிக உயரிய இடத்தில் சாலை: பொலிவியாவின் சாதனையை முறியடித்த இந்தியா

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி: பொலிவியாவில், 18,953 அடி உயரத்தில் உதுருஞ்சு எரிமலைக்கு செல்லும் சாலையே இதுவரை உலகின் உயரமான சாலை என்ற பெருமையை பெற்றிருந்தது. அதனை இந்தியா இப்போது முறியடித்துள்ளது.கிழக்கு லடாக்கின் - உம்லிங்லா பாஸ் பகுதியில் 19,300 அடி உயரத்தில், சாலை அமைக்கப்பட்டு உள்ளது. 52 கி.மீ., நீளம் கொண்டது இந்த தார் சாலை. இதன்மூலம் உலகிலேயே மிக உயரமான சாலையை கொண்ட நாடு என்ற பெருமையை

புதுடில்லி: பொலிவியாவில், 18,953 அடி உயரத்தில் உதுருஞ்சு எரிமலைக்கு செல்லும் சாலையே இதுவரை உலகின் உயரமான சாலை என்ற பெருமையை பெற்றிருந்தது. அதனை இந்தியா இப்போது முறியடித்துள்ளது.
கிழக்கு லடாக்கின் - உம்லிங்லா பாஸ் பகுதியில் 19,300 அடி உயரத்தில், சாலை அமைக்கப்பட்டு உள்ளது. 52 கி.மீ., நீளம் கொண்டது இந்த தார் சாலை. இதன்மூலம் உலகிலேயே மிக உயரமான சாலையை கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.



latest tamil news



தற்போது அமைக்கப்பட்டுள்ள உம்லிங்லா பேருந்து சாலை லடாக்கின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும். இந்த சாலை கிழக்கு லடாக்கின் சுமர் செக்டாரில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கிறது. லே பகுதியில் இருந்து சிசும்லே மற்றும் டெம்சோக் பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த 52 கி.மீ., சாலை புதிய வசதியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இதனால் உள்ளூர் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த சாலையின் மூலம் சுற்றுலாவும், சமூக பொருளாதாரமும் உயரும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.


latest tamil news



இந்த பகுதியில் குளிர் காலங்களில் மைனஸ் 40 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை சென்றுவிடும். இப்படியொரு சவாலான சூழலில் இந்திய எல்லை சாலைகள் அமைப்பு ஊழியர்கள் இந்த சாலையை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஆக-202105:27:22 IST Report Abuse
ராஜா நம் திறமையைக்காட்ட பலமான எதிரிகள் வேண்டும். சீனா அந்த வேலையை சிறப்பாகச் செய்கிறது.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
05-ஆக-202120:57:46 IST Report Abuse
sankaranarayanan உம்லிங்லா பாஸ் பகுதியில் 19,300 அடி உயரத்தில், சாலை அமைக்கப்பட்டு உள்ளது. 52 கி.மீ., நீளம் கொண்டது இந்த தார் சாலை. இதன்மூலம் உலகிலேயே மிக உயரமான சாலையை கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதைக்கேட்க ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை வருகிறது. ஆனால் தமிழ் நாட்டில்தான் எட்டுவழிச்சாலை வேண்டாம் - ஸ்டெரிலைட்டு ஆலை ஓடவேண்டாம் - நீட் வேண்டாம் - விவசாயிகள் சட்டம் வேண்டாம் - கூடங்குளம் அபிவிருத்தி வேண்டாம் - மீத்தேன் வேண்டாம் - அனல் மின்சாரம் விரிவாக்கம் வேண்டாம் - தடுப்பணைகள் கட்ட வேண்டாம் - சாராய ஆலைகள் ஒழிக்கப்பட வேண்டாம் - இட ஒதிக்கிடு ஒழிக்கப்பட வேண்டாம் - ஹிந்தி மொழி கற்றுக்கொடுக்க வேண்டாம் - சம்ஸ்க்ருதம் படிப்பவர்கள் வேண்டாம் - அந்தணர்கள் வேண்டாம் - என்று வேண்டாம் என்ற லிஸ்டில் அடுக்கிக்கொண்டே போகலாம் வேண்டும் என்ற லிஸ்டில் மிக முக்கியமானது ஒன்றே ஒன்றுதான் - அது மதுக்கடைகள் இன்னுமும் திறக்க வேண்டும் - மது உற்பத்தி ஆலைகள் அதிகரிக்க வேண்டும் நாடு உற்ப்படாப்பிலேதான் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
05-ஆக-202119:30:47 IST Report Abuse
M  Ramachandran வடக்கு சிறப்பாக முனேஆறுகிறது ஆனால் தெற்கில் சாலை அமைத்தால் காங்கிரஸ் செய்ய வேண்டிய வேலயை வாய்க்கோ திருதிரு வளவன் தீய மு க்க இவைகள் நாட்டின் போட்டு போராட்டம் என்ற பெயரில் விவசாயிகளை தூன்டி விட்டு வளர்ச்சிக்கு முட்டு கட்டை போடு கின்றன .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X