உலகிலேயே மிக உயரிய இடத்தில் சாலை: பொலிவியாவின் சாதனையை முறியடித்த இந்தியா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உலகிலேயே மிக உயரிய இடத்தில் சாலை: பொலிவியாவின் சாதனையை முறியடித்த இந்தியா

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (24)
Share
புதுடில்லி: பொலிவியாவில், 18,953 அடி உயரத்தில் உதுருஞ்சு எரிமலைக்கு செல்லும் சாலையே இதுவரை உலகின் உயரமான சாலை என்ற பெருமையை பெற்றிருந்தது. அதனை இந்தியா இப்போது முறியடித்துள்ளது.கிழக்கு லடாக்கின் - உம்லிங்லா பாஸ் பகுதியில் 19,300 அடி உயரத்தில், சாலை அமைக்கப்பட்டு உள்ளது. 52 கி.மீ., நீளம் கொண்டது இந்த தார் சாலை. இதன்மூலம் உலகிலேயே மிக உயரமான சாலையை கொண்ட நாடு என்ற பெருமையை

புதுடில்லி: பொலிவியாவில், 18,953 அடி உயரத்தில் உதுருஞ்சு எரிமலைக்கு செல்லும் சாலையே இதுவரை உலகின் உயரமான சாலை என்ற பெருமையை பெற்றிருந்தது. அதனை இந்தியா இப்போது முறியடித்துள்ளது.
கிழக்கு லடாக்கின் - உம்லிங்லா பாஸ் பகுதியில் 19,300 அடி உயரத்தில், சாலை அமைக்கப்பட்டு உள்ளது. 52 கி.மீ., நீளம் கொண்டது இந்த தார் சாலை. இதன்மூலம் உலகிலேயே மிக உயரமான சாலையை கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.



latest tamil news



தற்போது அமைக்கப்பட்டுள்ள உம்லிங்லா பேருந்து சாலை லடாக்கின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும். இந்த சாலை கிழக்கு லடாக்கின் சுமர் செக்டாரில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கிறது. லே பகுதியில் இருந்து சிசும்லே மற்றும் டெம்சோக் பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த 52 கி.மீ., சாலை புதிய வசதியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இதனால் உள்ளூர் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த சாலையின் மூலம் சுற்றுலாவும், சமூக பொருளாதாரமும் உயரும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.


latest tamil news



இந்த பகுதியில் குளிர் காலங்களில் மைனஸ் 40 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை சென்றுவிடும். இப்படியொரு சவாலான சூழலில் இந்திய எல்லை சாலைகள் அமைப்பு ஊழியர்கள் இந்த சாலையை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X