பெகாசஸ் வழக்கு - ஒருவர் கூட ஏன் வழக்கு தொடரவில்லை?; நீதிபதி கேள்வி

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (94+ 3)
Share
Advertisement
புதுடில்லி: 'பெகாசஸ் மென்பொருள் மூலம் போன் ஒட்டுக்கேட்கப்பட்டது என்கிறார்களே தவிர வேறு எந்த ஆதாரமும் தரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் யாருமே ஏன் கிரிமினல் வழக்கு தொடரவில்லை' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கேள்வி எழுப்பினார்.'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக நம் நாட்டில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என, 300க்கும் மேற்பட்டோரின் போன்கள் ஒட்டு
Pegasus Spyware, Supreme Court, Allegations, Serious, பெகாசஸ், ஸ்பைவேர், மென்பொருள், ஒட்டுக்கேட்பு, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம்

புதுடில்லி: 'பெகாசஸ் மென்பொருள் மூலம் போன் ஒட்டுக்கேட்கப்பட்டது என்கிறார்களே தவிர வேறு எந்த ஆதாரமும் தரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் யாருமே ஏன் கிரிமினல் வழக்கு தொடரவில்லை' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கேள்வி எழுப்பினார்.

'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக நம் நாட்டில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என, 300க்கும் மேற்பட்டோரின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி, 'எடிட்டர்ஸ் கில்டு' எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதைத் தவிர மூத்த பத்திரிகையாளர்கள் உள்பட பலர் மனு தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள, 9 மனுக்களை, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்ய காந்த் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று (ஆக.,05) விசாரித்தது.


latest tamil news


வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான கபில் சிபல் ஆஜரானார். வழக்கு தொடர்பாக நீதிபதி ரமணா பல கேள்விகளை அடுக்கினார். 'ஊடகங்களில் வந்த இந்த செய்திகள் அத்தனையும் உண்மையானால் இந்த விவகாரம் தீவிரமானது. ஆனால் இவ்வழக்கில் அத்தனையும் ஊடகங்கள் சொல்வதாகத்தான் உள்ளதே தவிர வேறு எந்த ஆவணமும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களும் தங்களது போன் ஒட்டுக்கேட்கப்பட்டது என்கிறார்களே தவிர வேறு எந்த ஆதாரமும் தரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் யாருமே ஏன் கிரிமினல் வழக்கு தொடரவில்லை' எனக் கேள்வி எழுப்பினார்.


latest tamil newsஇதற்கு பதிலளித்த கபில் சிபல், 'கலிபோர்னியா நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை என்.ராம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். கலிபோர்னியா நீதிமன்றத்தில் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சாப்ட்வேர் நிறுவப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது,' எனச் சுட்டிக்காட்டினார். குறுக்கிட்ட நீதிபதி ரமணா, "2019ல் நடந்த இந்த விவகாரத்தை தற்போது மீண்டும் விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன? வாஷிங்டன் போஸ்ட் ஊடகம், 122 இந்தியர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இதனை அமைச்சர் ஒருவரும் உறுதி செய்துள்ள நிலையில், எந்த அரசும் இதுவரை எப்.ஐ.ஆர் பதிவு செய்யாதது ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார்.


latest tamil news


தொடர்ந்து வாதாடிய கபில் சிபல், 'ஒருபோனை ஒட்டுக்கேட்க 55 ஆயிரம் டாலர்கள் செலவாகிறது எனச் சொல்கிறார்கள். இறையாண்மை தகுதியுடைய நிறுவனங்கள் பயங்கரவாதிகளை ஒட்டுக்கேட்பதற்குதான் இந்த பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது என்றால் இந்தியாவில் தற்போது ஒட்டுக்கேட்கப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதியா?' என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து நடந்த வாதத்திற்கு பிறகு, பெகாசஸ் விவகாரம் குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (94+ 3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
05-ஆக-202123:46:53 IST Report Abuse
Kasimani Baskaran பட்டியலில் இருப்பவர்கள் அனைவரும் திவீரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார்கள் என்று அரசு பதிலளித்தால் இவர்கள் அனைவரும் தூக்கில் தொங்கிவிடுவார்கள் என்று நீதிமன்றம் எதிர்பார்க்கும்.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
05-ஆக-202121:17:18 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN பாமரனுக்கு கிடைச்சிட்டிருந்த அரைவட்ட காய்ஞ்ச ரொட்டியும் கிடைக்கிறதில்லையோ ? ஜிங் சக்கு சத்தம், கதறல் சத்தம் எது அதிகம் என்று போட்டியே வைக்கலாம் போலயே ?
Rate this:
Cancel
Goindarajan - Chennai,இந்தியா
05-ஆக-202121:09:31 IST Report Abuse
Goindarajan வழக்கு ஒருவரும் தங்கள் செல் போன்களை ஆய்வு செய்ய சமர்ப்பிக்க மாட்டார்கள் ஏன் என்றால் இவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டு ஏஜன்ட்கள் மூலம் இவர்கள் இந்தியாவிற்கு எதிராக செய்யும் சதிகள் நிச்சயமாக வெளி வந்துவிடும் அது போக இப்படிப்பட்ட பொய்ச் செய்திகள் கடந்த ஆறு வருடங்களாக ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் பாராளுமன்ற கூட்டத்திற்கு முன்பும் கிளப்பிவிடப்படுவது வாடிக்கையாகிவிட்டது இதை வைத்துத் தான் எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரத்தையும் பாராளுமன்றத்தை முடக்குவதற்கும் உபயோகித்துக் கொள்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X