பொது செய்தி

இந்தியா

இன்றைய டுவிட்டர் டிரெண்டிங்

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பின் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இதனால் இந்திய வீரர்கள் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்கள். இந்தியாவின் இன்றைய சாதனை டுவிட்டரில் தேசிய அளவில் பல ஹேஷ்டாக்குகளில் டிரெண்ட் ஆனது. ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதி வரை
Hockey, HockeyIndiaTeam, After41, Manpreetsingh, IndvsGer, TheGreatWallofIndia, 41Years

புதுடில்லி : இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பின் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இதனால் இந்திய வீரர்கள் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்கள். இந்தியாவின் இன்றைய சாதனை டுவிட்டரில் தேசிய அளவில் பல ஹேஷ்டாக்குகளில் டிரெண்ட் ஆனது.

ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதி வரை சென்று அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து வெண்கல பதக்கத்திற்காக நடந்த போட்டியில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதின. கடைசி வரை பரபரப்பாக நடந்த போட்டியில் இந்திய அணி 5 - 4 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று பதக்கத்தை கைப்பற்றியது. இதன்மூலம் 41 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது. அதோடு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பதக்கங்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.


latest tamil newsஇந்திய ஹாக்கி அணி இன்று செய்த வரலாற்று சாதனை டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. நாடு முழுக்க இந்திய வீரர்களை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனால் டுவிட்டரில் #Hockey, #HockeyIndiaTeam, #After41, #Manpreetsingh, #IndvsGer, #TheGreatWallofIndia, #41Years உள்ளிட்ட பல ஹேஷ்டாக்குகள் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின.

‛‛இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். வரலாற்று சிறப்பு மிக்க நாள். 41 ஆண்டுகளுக்கு பின் வரலாறு மீண்டும் திரும்பியது. இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் நன்றி. நாட்டுக்காக பெருமை சேர்த்துள்ளீர்கள். இன்றைய நாள் இந்தியர்களுக்கு முக்கியமானது, இதை என்றும் மறக்கமாட்டார்கள். இந்திய அணியினர் அற்புதமாக விளையாடினர். என்ன ஒரு விளையாட்டு. கடைசி வரை திக்.. திக்... வாழ்த்துக்கள் இந்திய அணி'' இப்படியாக பலரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து தங்களது கருத்துக்களை டுவிட்டர் வாயிலாக பதிவிட்டுள்ளனர்.


latest tamil news
போன் மூலம் பிரதமர் வாழ்த்து


வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி போன் மூலம் வாழ்த்தினார். இந்திய கேப்டன் மன்பிரீத் சிங், பயிற்சியாளர் கிரஹாம் ரெயிட், துணை பயிற்சியாளர் பியூஷ் துபே ஆகியோரிடம் போன் மூலம் தனித்தனியாக வாழ்த்தி தெரிவித்தார். இந்த வீடியோ டுவிட்டரில் வைரல் ஆனது. இதேப்போன்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வீடியோ கால் மூலம் இந்திய வீரர்களை வாழ்த்தினார்.
வீரர்களின் ஊரில் கொண்டாட்டம்


இதனிடையே இந்திய ஹாக்கி அணி வீரர்களின் ஒவ்வொரு ஊரிலும் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி உள்ளன. பட்டாசு, வான வேடிக்கை, மேளதாளங்கள் முழுக்கங்கள், ஆட்டம், பாட்டு என கொண்டாடி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - stockholm,சுவீடன்
05-ஆக-202116:56:48 IST Report Abuse
srinivasan 4 medals for 140 crore people is not social justice. Melals should be reserved in quota tem based on population. Parties like DMK should pressurise UN and Olympic committee for social justice in sports for 50 years until this happens .. Ha ha
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
05-ஆக-202116:02:33 IST Report Abuse
SUBBU வெண்கலப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
05-ஆக-202115:53:35 IST Report Abuse
vnatarajan கடைசி இரண்டு நிமிட ஆட்டம் என்னை இருக்கையின் விளிம்பிற்கு சென்றுவிட செய்தது. கோல் கீபேரின் சாமர்த்தியத்தால் ஜெர்மனியால் யைந்தாவது கோல் போடமுடியவில்லை. ஹாக்கி டீமிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் ஒரு ஹாக்கி பிரியன் எனக்கு வயது 81 என்னுடைய முப்பத்தி ஏழு வருட ஏக்கத்திற்கு ஒரு முற்று புள்ளிவைத்துவிட்டார்கள் இரண்டாயிரத்து இருபது ஒலிம்பிக் டீம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X