மானிய விலையில் விதை நெல் வினியோகம்; அதிகாரி தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மானிய விலையில் விதை நெல் வினியோகம்; அதிகாரி தகவல்

Added : ஆக 05, 2021
Share
அம்மாபேட்டை: அம்மாபேட்டை யூனியன் வேளாண்மை உதவி இயக்குனர் கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கை: நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற பருவம், அதன் ரகங்களை, விவசாயிகள் தெரிந்துகொண்டு அதற்கேற்ப பயிர் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். ஆக., முதல் செப்., வரையிலான சம்பா பருவத்தில், நெல் ரகங்களான கோ 50, டி.கே.எம்.13., ஐ.ஆர். 20., ஏ.டி.டீ. 38., 39, பி.பி.டி. 5204., சம்பா சப்-1, டி.ஆர்.ஒய் 3., மற்றும் மேம்படுத்தப்பட்ட

அம்மாபேட்டை: அம்மாபேட்டை யூனியன் வேளாண்மை உதவி இயக்குனர் கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கை: நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற பருவம், அதன் ரகங்களை, விவசாயிகள் தெரிந்துகொண்டு அதற்கேற்ப பயிர் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். ஆக., முதல் செப்., வரையிலான சம்பா பருவத்தில், நெல் ரகங்களான கோ 50, டி.கே.எம்.13., ஐ.ஆர். 20., ஏ.டி.டீ. 38., 39, பி.பி.டி. 5204., சம்பா சப்-1, டி.ஆர்.ஒய் 3., மற்றும் மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி போன்ற 135 நாட்கள் வயதுடைய நெல் ரகங்களை இந்த பருவத்தில் பயிரிடலாம். இந்த நெல் ரகங்கள் அம்மாபேட்டை யூனியன் வேளாண்மை விரிவாக்க மையத்தில், போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் நெற்பயிருக்கு தேவைப்படும் நுண்ணூட்ட உரம், நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்றவைகளும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே தேவைப்படும் விவசாயிகள் மானிய விலையில், விதைகள் மற்றும் இடுபொருட்களை பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X