பொது செய்தி

தமிழ்நாடு

பெருந்துறை பகுதியில் ரூ.8.34 கோடி மோசடி; மூன்று பேர் தலைமறைவு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
ஈரோடு: முதலீட்டாளர்களிடம் இருந்து, 8.34 கோடி ரூபாயை பெற்று, மோசடி செய்து தலைமறைவான மூவர் குறித்து தகவல் தெரிவிக்க, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா, கம்புளியம்பட்டி காசிலிங்க கவுண்டன் புதூர் சரளையில், பாஸ் பவுல்ட்ரி பார்ம்ஸ் என்ற நிறுவனத்தை பாஸ்கரன் என்பவர் நடத்தி நாட்டு கோழி வளர்ப்பு திட்டத்தை

ஈரோடு: முதலீட்டாளர்களிடம் இருந்து, 8.34 கோடி ரூபாயை பெற்று, மோசடி செய்து தலைமறைவான மூவர் குறித்து தகவல் தெரிவிக்க, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.


ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா, கம்புளியம்பட்டி காசிலிங்க கவுண்டன் புதூர் சரளையில், பாஸ் பவுல்ட்ரி பார்ம்ஸ் என்ற நிறுவனத்தை பாஸ்கரன் என்பவர் நடத்தி நாட்டு கோழி வளர்ப்பு திட்டத்தை அறிவித்தார். 2012ல், 98 முதலீட்டாளர்களிடம் இருந்து, ஒரு கோடியே, 38 லட்சத்து, 98 ஆயிரத்து, 500 ரூபாய் டிபாசிட் தொகையாக பெற்றார். ஆனால் அந்த தொகையை முதலீட்டாளர்களுக்கு திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் வந்து தலைமறைவானார். இந்நிலையில் 2019 செப்.,13ல் நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. 2021 ஏப்.,30ல் கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன் பின்னரும் ஆஜராகாததால், பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


* சென்னிமலை, 1010 காலனி முகாசிபிடாரியூர் கோபால் மகன் சுரேஷ்பாண்டி, சிரகிரி பார்ம்ஸ் நடத்தி, 2012ல், 107 முதலீட்டாளர்களிடம் இருந்து, ஒரு கோடியே, 39 லட்சத்து, 3,568 ரூபாயை டிபாசிட்தாரர்களுக்கு திருப்பி கொடுக்காமல் தலைமறைவானார். 2020 டிச., 11 முதல் தலைமறைவாக இருந்து வருகிறார்.


* பெருந்துறை தாலுகா, சென்னிமலை காட்டூர் ரோடு ரோஜா நகர் செல்வகுமார், ஈமு பார்ம்ஸ் நடத்தினார். 2012ல், 140 முதலீட்டாளர்களிடம், ஐந்து கோடியே, 56 லட்சத்து, 55 ஆயிரம் பெற்றார். இவரும் தலைமறைவானார். இம்மூவர் குறித்து தகவல் தெரிந்தால், ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை, 04242256700, 9498178566 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X