சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாரச்சந்தை வளாகத்தில் பஸ் ஓட்டுனர் சடலம் மீட்பு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: வாரச்சந்தை வளாகத்தில், பஸ் ஓட்டுனர் சடலம் மீட்கப்பட்டது. புன்செய்புளியம்பட்டி, பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள வாரச்சந்தை வளாகத்தில் நேற்று காலை, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக கிடந்தார். உடல் அருகே விஷ மருந்து பாட்டில் கிடந்தது. தகவலறிந்த புளியம்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு சத்தியமங்கலம் அரசு

புன்செய்புளியம்பட்டி: வாரச்சந்தை வளாகத்தில், பஸ் ஓட்டுனர் சடலம் மீட்கப்பட்டது. புன்செய்புளியம்பட்டி, பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள வாரச்சந்தை வளாகத்தில் நேற்று காலை, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக கிடந்தார். உடல் அருகே விஷ மருந்து பாட்டில் கிடந்தது. தகவலறிந்த புளியம்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், இறந்து கிடந்தவர் கோவை மாவட்டம், சின்ன கள்ளிப்பட்டியை சேர்ந்த ரமணி, 38, என்பதும், அரசு போக்குவரத்து கழக ஓட்டுனராக, சிறுமுகை பகுதியில் தங்கியிருந்து வேலைக்கு செல்வதும் தெரிந்தது. திருமணமாகாத ஏக்கத்தில் இருந்த ஓட்டுனர் ரமணி, மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X