போதையில் நால்வர் ரகளை; தட்டி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதையில் நால்வர் ரகளை; தட்டி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

Added : ஆக 05, 2021
Share
பு.புளியம்பட்டி: மது போதை ரகளையில் ஈடுபட்ட நான்கு பேரை, தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.புன்செய்புளியம்பட்டி அருகே கோவில் புதூர் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் பழனிசாமி, 28. இவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன் நின்று சிலருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியே ஹோண்டா டியோ, யமஹா எப்இசட் இரண்டு இருசக்கர வாகனங்களில் சென்ற நான்கு பேர், மதுபோதையில்

பு.புளியம்பட்டி: மது போதை ரகளையில் ஈடுபட்ட நான்கு பேரை, தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.


புன்செய்புளியம்பட்டி அருகே கோவில் புதூர் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் பழனிசாமி, 28. இவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன் நின்று சிலருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியே ஹோண்டா டியோ, யமஹா எப்இசட் இரண்டு இருசக்கர வாகனங்களில் சென்ற நான்கு பேர், மதுபோதையில் மொபைல்போனில் தகாத வார்த்தைகள் பேசியபடி, கூச்சலிட்டு சென்றுள்ளனர். இதை பழனிசாமி மற்றும் அப்பகுதி மக்கள் தட்டி கேட்டனர். இதையடுத்து அங்கிருந்து சென்ற அவர்கள், ஒரு மணி நேரம் கழித்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து பழனிசாமியை அரிவாளால் வெட்டியும், இரும்பு கம்பியாலும் தாக்கியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் வந்ததும் நான்கு பேரும் தப்பினர். கோவை அரசு மருத்துவமனையில் பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். பு.புளியம்பட்டி போலீசார் விசாரித்து, திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே பெரியகானூரை சேர்ந்த அரவிந்த் (எ) கிருஷ்ணமூர்த்தி, 20, லோகேஷ், 24, சுரேஷ்குமார், 24, கார்த்திக், 22, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X