100 நாட்களில் 5 ஆண்டு சாதனை: முதல்வர் ஸ்டாலினுக்கு புகழாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

100 நாட்களில் 5 ஆண்டு சாதனை: முதல்வர் ஸ்டாலினுக்கு புகழாரம்

Added : ஆக 05, 2021
Share
கிருஷ்ணகிரி: 'நூறு நாட்களில், ஐந்தாண்டு சாதனை படைத்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலின்' என, பர்கூர் ஒன்றிய, தி.மு.க., செயலாளர் கோவிந்தராசு புகழாரம் சூட்டியுள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், கொரோனா நிவாரணமாக, 4,000 ரூபாய் வழங்கினார். நாள் ஒன்றுக்கு, 36 ஆயிரம் என்ற அளவில் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், துரித நடவடிக்கைகளால்

கிருஷ்ணகிரி: 'நூறு நாட்களில், ஐந்தாண்டு சாதனை படைத்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலின்' என, பர்கூர் ஒன்றிய, தி.மு.க., செயலாளர் கோவிந்தராசு புகழாரம் சூட்டியுள்ளார்.


இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், கொரோனா நிவாரணமாக, 4,000 ரூபாய் வழங்கினார். நாள் ஒன்றுக்கு, 36 ஆயிரம் என்ற அளவில் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், துரித நடவடிக்கைகளால் குறைக்க நடவடிக்கை எடுத்தார். தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை ஜனாதிபதியால் திறந்து வைத்து சாதனை படைத்தார். மேலும், 100 நாட்களில் குறைகளை தீர்க்கும் திட்டத்தில் பெரும்பாலான மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது என, ஐந்தாண்டு சாதனையை, 100 நாட்களுக்குள்ளாகவே செயல்படுத்தி மகத்தான சாதனை படைத்துள்ளார். அவர், இன்று(ஆக.,5) இந்தியாவிலேயே முதன்முறையாக 'மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை துவங்கி வைப்பதன் மூலம், முன்னோடி முதல்வராக திகழ்ந்து வருகிறார். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X