பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசு நிதி திட்டத்தில் சேமிப்பு கிடங்கு நிறுவ கடன்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின், 'வேளாண் உட்கட்டமைப்பு நிதி' திட்டத்தில் கடன் பெற்று, வட்டியில், 3 சதவீத சலுகை பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற, விரிவான திட்ட அறிக்கை வழங்க வேண்டும். அதன் விபரத்தை, agriinfra.dac.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சேமிப்பு கிடங்கு, சேமிப்பு குதிர், சிப்பம் கட்டும் அறை, தரம் பிரிக்கும் அலகு,

சேலம்: சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின், 'வேளாண் உட்கட்டமைப்பு நிதி' திட்டத்தில் கடன் பெற்று, வட்டியில், 3 சதவீத சலுகை பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற, விரிவான திட்ட அறிக்கை வழங்க வேண்டும். அதன் விபரத்தை, agriinfra.dac.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சேமிப்பு கிடங்கு, சேமிப்பு குதிர், சிப்பம் கட்டும் அறை, தரம் பிரிக்கும் அலகு, மதிப்பீட்டு அலகு, குளிர்பதன சங்கிலி, தளவாட வசதி, முதன்மை பதப்படுத்தும் நிலையம், பழுக்க வைக்கும் கூடங்கள் போன்ற தேவைகளுக்கு கடன் உண்டு. விண்ணப்ப கடிதம், மனுதாரர் போட்டோ, வங்கி கடன் படிவம், ஆதார் நகல், நில உரிமை ஆவணம், மூன்றாண்டுக்கு வருமானவரி தாக்கல் உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும். தகவலுக்கு, 0427 - 2417520 என்ற எண்ணில் அழைக்கலாம்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X